6 வயதுச் சிறுமியை மூர்க்கமாகத் தாக்கிய சிறியதாய் கைது! - பேஸ்புக்கில் பரவிய வீடியோவின்
23 Sep,2016
6 வயதுச் சிறுமியை மூர்க்கமாகத் தாக்கிய சிறியதாய் கைது! - பேஸ்புக்கில் பரவிய வீடியோவின்
நீர்வேலிப் பகுதியில், 6 வயது சிறுமியை மிருகத்தனமாக தாக்கிய சிறுமியின் வளர்ப்புத் தாய், கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில் பெண்ணொருவர், குறித்த சிறுமியை, கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, நேற்றுக் காலை, பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது. இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே, சிறுமியைத் தாக்கிய தாய், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கும் கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், தாக்குதல் மேற்கொண்ட தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாய் உயிரிழந்தமையால், தந்தை வேறு திருமணம் முடித்துள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே, சிறுமியை மிக மூர்க்கதனமாக தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மற்றும் சிறுமியின் சகோதரர்கள் உட்பட நான்கு சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளனர்.