2 மணி நேரத்தில் 20 பேரை கடித்து குதறிய நாய்
08 Aug,2016
சீனாவில் நாய் ஒன்று சுமார் 2 மணி நேரம் சாலையில் செல்பவர்களை கடித்து குதறி வெறியாட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சீனாவின் குய்சவ் மாகாணத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதியில் திடீரென அப்பகுதிக்குள் நுழைந்த நாய், தெருவில் நின்றுகொண்டிருந்த நபரை கடிக்க முயற்சிக்கிறது.
அந்நபர் அந்த நாயிடம் இருந்து தப்பிபதற்காக அதனை அடிக்க முயற்சிக்கிறார், ஆனால் அந்நாயோ வெறிபிடித்து, அந்நபரின் கைகளில் தொங்கியபடி அவரை கடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக காரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெண்மணியை துரத்தி துரத்தி கடிக்கிறது.
அப்பெண் தான் கையில் வைத்திருந்த ஜாக்கெட்டை வைத்து, அதனை விரட்டியடிக்கிறார். இதுபோன்று 8 வயது குழந்தை முதல் 78 வயது முதியவர் வரை தெருவில் சென்றுகொண்டிருப்பவர்களையெல்லாம் கடித்து குதறியது.
சுமார், 2 மணிநேரம் நாய் நடத்திய இந்த வெறியாட்டத்தால் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த நாயினை சுட்டதில் அது உயிரிழந்துள்ளது