யோசிதவின் வழக்கு முடிந்தால் மீண்டும் வழக்கு தொடரப்படும்:
27 Apr,2016
யோசிதவின் வழக்கு முடிந்தால் மீண்டும் வழக்கு தொடரப்படும்: இராணுவ ஊடகப் பேச்சாளர்
தற்போது நடைபெற்று வரும் யோசிதவின் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் கடற்படை தரப்பில் யோசித மீது வழக்கு தொடப்பட்டு விசாரணைகள் நடைபெறும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.தற்போது யோசித மீது இரண்டு வழக்குகள் பற்றியே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.ஒன்று யோசித கடைற்படையில் இணைவதற்தற்கான தகுதிகள் அவருக்கு இருந்தனவா என்பது தொடர்பிலும், மற்றையது கடற்படையில் இணைந்த பின்னர் அவர் மேற்கொண்ட சட்டரீதியற்ற வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் குறித்த விசாரணைகள் ஆகும்.இதுபற்றிய விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் யோசித கடற்படை தரப்பிலான விசாரணைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிவரும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.கடற்படையில் இணைவதற்கான தகுதிகள் எதும் இல்லாத யோசிதவை ஏற்றுக் கொண்டமைக்கான காரணம் என்ன? என பிரிகேடியர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் யோசித இராணுவ பயிற்சி பெறும் காலப்பகுதியில் அவருடன் பயிற்சி பெற்ற சக பயிற்சியாளர்கள் மீது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இது பற்றிய விசாரணைகளும் யோசித மீது மேற்கொள்ளப்படும் எனவும் இதன்போது இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்
இலங்கை சரித்திரத்தில் இதுவே முதல் தடவை யாழ். நிலாவரை கிணற்றுக்குள்ளிருந்து சடலத்தை மீட்ட கடற்படை
அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக்கவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சடலத்தை இலங்கை கடற்படையினர் சுழியோடி குழுவினர் மீட்டுள்ளனர்.நிலாவரை கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க உதவி வழங்கினர்.அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் இப்பகுதி யாழ் குடா நாட்டின் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.40மீற்றர் ஆழத்தில் உள்ள பாறையின் முகட்டில் சிக்குண்டு காணப்பட்ட இறந்தவரின் சடலத்தை கடற்படை சுழியோடிகளால் நீருக்கடியில் ரிமோட் கருவி மூலம் இயக்கப்படும் வாகனத்தைப்பயன்படுத்தி கண்டறிந்தனர்.இவ்வாறு கண்டறியப்பட்ட சடலத்தை கடற்படை சுழியோடிகள் குழுவின் இரு சுழியோடிகளின் துணிகரச் செயலின் மூலம் ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டது.இவ்வாறான ஆழமான கிணறு ஒன்றிலிருந்து இலங்கை கடற்படையினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கை இது என்பது குறிப்பிடுகின்றனர்.135 அடியில் சடலம் இருந்தபோதும் அதுக்கு அப்பாலும் பல ஆயிரம் அடிக்கு ஒரு குகை இருப்பதாகவும் அது எங்கே போய் முடிகின்றது என்று தெரியாது எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்