சம்பூர் அனல்மின் நிலையப் பணிகள் இந்த ஆண்டு ஆரம்பம்
21 Apr,2016
சம்பூர் அனல்மின் நிலையப் பணிகள் இந்த ஆண்டு ஆரம்பம்
சம்பூரில் அனல் மின்நிலையத்தின் மூன்று கட்ட நிர்மாணப் பணிகளும் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ‘முதற்கட்டமான மேற்கொள்ளப்படவுள்ள 500 மெகாவாட் அனல்மின் திட்ட கட்டுமாணப் பணி தொடர்பான சுற்றாடல் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நாம் முன்னெடுக்க முடியும்.
இந்த அனல் மின் நிலையத்தை இந்தியாவின் தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து ஆரம்பிக்க, 2008இல் முடிவு செய்யப்பட்டது.
2017ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்ட போதிலும், சூழலியலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் தாமதம் ஏற்பட்டுள்ளது,
சம்பூர் திட்டம் நிறைவேற்றப்பட்டதும், 1700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்