கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி!
29 Mar,2016
கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி!
கட்டுநாயக்க விமான நிலைய விஸ்தரிப்புக்காக ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி இலங்கையுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளது. இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில், பயணிகளுக்கான புதிய இடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதற்காக 56 பில்லியன் ரூபாய்களை ஜப்பான் வழங்கவுள்ளது. இதன்மூலம் வருடம் ஒன்றுக்கு 15 மில்லியன் பயணிகளை இந்த விமான நிலையத்தின் ஊடாக கையாளக்கூடியதாக இருக்கும்.

தற்போது இந்த விமான நிலையத்தின் ஊடாக 8.5 மில்லியன் பயணிகளே வந்து செல்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் 23 விமான தரிப்பிடங்களும் அமைக்கப்படவுள்ளன. 96 மேலதிக பரிசோதனை மையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. 2020ஆம் ஆண்டில் இந்த பணிகள் முழுமை பெறவுள்ளன.
அனுமதி பெறாமல் கட்டப்படுவதால் நயினாதீவு புத்தர் சிலைக்கு தடை!
நயினாதீவு நாகதீப விகாரைக்கு முன்பாக, அமைக்கப்பட்டு வந்த 75 அடி புத்தர் சிலையின் நிர்மாணப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இந்த புத்தர் சிலையை அமைப்பதற்கு யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர், ஆலோசனை வழங்கியதையடுத்தே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. சுமார் 120 மில்லியன் ரூபாய் செலவில் நாகவிகாரைக்கு நேராக, இறங்குதுறைக்கு தெற்காக கடலின் நடுவில் இந்தப் புத்தர் சிலை அமைப்பதற்கான பணிகள், அண்மைக்காலமாகக் கடற்படையின் உதவியுடன் விகாரதிபதி நவதகல பதுமகித்தி தேரர் மேற்கொண்டார்.
சிலை அமைப்பதற்கான அத்திவாரம் இடும் பணி, கடற்படையின் பாதைகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான அடிக்கல்லை, புத்தசாசன மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சில மாதங்களுக்கு முன்னரே மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.