வித்தியா நிச்சயம் உயிர் பிழைப்பார்... மீண்டு வருவார்...
07 Mar,2016
லண்டன் சவுத்ஹாலில் கூடிய ஆயிரக்கணக்கான தமிழர்கள்: ஜேர்மனி பிரான்சில் இருந்து கூட வந்தார்கள் !
நேற்றைய தினம் (ஞாயிறு) காலை முதலே, உணர்ச்சி மிக்க ஈழத் தமிழர்கள் பலர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வித்தியாவுக்கு உதவ வரிசைகட்டி நின்றார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு , தமது டி,என்.ஏ மாதிரியை கொடுத்துச் சென்றுள்ளார்கள். இதில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் இருந்து கூட இளையோர்கள் வந்து தமது டி.என்,ஏ மாதிரியைக் கொடுத்துள்ளமை மிகவும் வரவேற்க்கத்தக்க விடையம். காலை முதல் மாலை 6 மணி வரை வந்து சென்ற தமிழர்களில் யாரவது ஒருவரது டி.என்.ஏ வித்தியாவுக்கு பொருந்தவேண்டும் என்று அங்கே நின்றவர்கள் பேசியது எமது காதுகளில் வீழ்ந்தது.
உயிருக்காகப் போராடும் ஈழத் தமிழ் மாணவி இன்று தமிழர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் என்று தான் கூறவேண்டும். வெறுமனவே வேலை செய்தோம் காசை உழைத்தோம், சந்தோஷமாக குடும்பத்துடன் இன்பம் கழித்தோம் என்று இல்லாமல். தமிழர்கள் திரண்டு வந்து வித்தியாவுக்கு உதவியுள்ளார்கள். இருப்பினும் இந்த குருதி புற்றுநோயை மாற்ற , பல ஆயிரக் கணக்கான மக்களின் டி,என்,ஏ பரிசோதிக்கப்படவேண்டி உள்ளது. அதில் ஒன்று தான் வித்தியாவின் டி.என்.ஏ யுடன் ஒத்துப் போகும்என்பது தான் உண்மை. எனவே யாராவது தமிழர்களே , இன்னும் செல்லாது இருந்தால் உடனே தொடர்புகொண்டு உங்கள் டி.என்,ஏ மாதிரியை கொடுத்து உதவுங்கள்.
வித்தியாவின் சொந்த இடம் புதுக்குடியிருப்பு என்றும். அங்கே பூர்வீகமாக இன்னும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சிலரது டி.என்.ஏ வித்தியாவுக்கு ஒத்துப்போகலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. லண்டனில் புதுக் குடியிருப்பு வாசிகள் இருந்தால் நிச்சயம் சென்று உங்கள் டி,என்.ஏ கொடுத்து பரீட்சித்துப் பாருங்கள். அத்தோடு ஈழத்தில் புதுக்குடியிருப்பிலும் அல்லது வட கிழக்கில் இதுபோன்ற ஒரு அவசர முகாமை அமைத்து சோதனை நடத்திப் பார்ப்பது நல்லது என்றும் சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வித்தியா நிச்சயம் உயிர் பிழைப்பார்... மீண்டு வருவார்...