ஸ்வீடனில் கார்விபத்து 5 பேர் பலி
16 Feb,2016
ஸ்வீடன் .தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோடர்டல்ஜி மாவட்டத்தில் உள்ள கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுதொடர்பாக, ஸ்டாக்ஹோல்ம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.