அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது -வழக்கை விசாரித்து விடுவிப்பதே முறை
08 Feb,2016
யாழ் சென்றிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், விக்கி ஐயா அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கவேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். அரசியல் கைதிகளை மன்னிப்பு வழங்கி விடுவது முறை அல்ல என்றும். வழக்கை விசாரித்து விடுவிப்பதே முறை என்றும் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். தான் சிரியா நாட்டிலும் இதனையே வற்புறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அப்படி என்றால் , வழக்கை துரிதப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுங்கள் என்று விக்கி ஐயா கேட்டுக்கொண்டுள்ளார். அதுபோக சிறையில் இருப்பவர்கள் சம்பந்தமாகவும், காணாமல் போனோர் சம்பந்தமாகவும், காணிகளை பறிகொடுத்தவர்கள் சம்பந்தமாகவும் விக்கி ஐயா ஹுசைனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது.