உலகின் அபாயகரமான பாலம் ?
09 Feb,2016
உலகின் அபாயகரமான பாலம் ?
ரஷ்யாவில் உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படும் ரயில் தண்டவாளத்தை மிகவும் அபாயகரமான பாலம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்
ரஷ்யாவின் டிரான்ஸ் பைக்கல் பகுதியில் Kuandinsky என்ற பாலம் அமைந்துள்ளது.
உறைந்துபோன நீர் நிறைந்த விட்டிம் நதியின் மேல் அமைந்துள்ள இந்த பாலம் உண்மையில் ரயில் தண்டவாளமாகும்.
எனினும் இந்த திட்டம் நிறைவேறாததால் இந்த தண்டவாளத்தை அப்படியே விட்டுவிட்டனர்.
இதையடுத்து அருகில் உள்ள குவாண்டா கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களின் போக்குவரத்துக்காக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
பாதுகாப்பு சுவர்கள் இல்லாதது, சேதமடைந்துள்ள மடக்கட்டைகள், வேகமான காற்று என பல்வேறு ஆபத்துகள் உள்ளபோதும் உள்ளூர் மக்கள் இதனை தைரியமாக பயன்படுத்துகின்றனர
மேலும் 30 ஆண்டுகளாக உள்ள இந்த மரப்பாலத்தில் சேதம் ஏற்பட்டாலும் அவர்களே சரி செய்து தங்களின் பயணத்தை தொடர்கின்றனர்.
அதே வேளையில் காற்று வேகமாக அடிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் கண்ணாடியை திறந்தபடியே செல்கின்றனர்.
எனினும் இந்த பாலத்தில் இதுவரை விபத்து ஏற்பட்டதற்கான ஆதரங்கள் எதுவும் இல்லை.
ஆபத்தானது என்பதால் குறைவான நபர்களே இப்பாலத்தை பயன்படுத்துவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.