குவைத்திலிருந்து படையெடுக்கும் இலங்கை பணிப் பெண்கள்
13 Jan,2016
குவைத்திலிருந்து படையெடுக்கும் இலங்கை பணிப் பெண்கள்
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான 80 பணிப் பெண்கள் குவைத் நாட்டில் இருந்து இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டினால் இவர்கள் இன்று காலை 6.50 மணியளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இம் மாத இறுதிக்குள் மேலும் சில பணிப் பெண்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும்தேரிவித்துள்ளது.
தடாகத்தில் மஹிந்தவின் தங்கம் ?
பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பீகொக் மாளிகை, பிரபல வர்த்தகரும் தொழிலதிபருமான ஏ.எஸ்.பி. லியனகேவிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த மாளிகையின் நீச்சல் தாடகத்தில் காணப்பட்ட நீரை அகற்றி அதில் மணல் நிரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாவறு மணல் நிரப்பக் காரணம் மஹிந்தவின் தங்கத்தை மறைத்து வைப்பதற்காகவேயாகும் என கடந்த காலங்களில் வதந்திகள் வெளியாகியிருந்தன.
இந்த வதந்தி தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஏ.எஸ்.பி லியனகே ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இது குறித்து விரைவில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்படும்;.
இதன்படி, குறித்த நீச்சல் தடாகத்தை பொலிஸார் சோதனையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய குறித்த நீச்சல் தடாகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மணல் கொண்டு நிரப்பியதாக முன்னதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
பீகொக் மாளிகை மஹிந்தவிற்கு வழங்கப்பட்டமை குறித்து அண்மையில் ஏ.எஸ்.பி. லியனகேவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்கு மூலம் பதிவு செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது