கனடா நாட்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 99 டொலர் கட்டணத்தில் விமான பயணம்:

04 Oct,2015
 

99 டொலர் கட்டணத்தில் விமான பயணம்: அதிரடி சிறப்பு சலுகை அறிவித்த விமான நிறுவனம்


கனடா நாட்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த WOW Air என்ற விமான நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விமான நிறுவனம் தற்போது தள்ளுபடி நிறைந்த மிக குறைந்த கட்டணத்தில் ஐஸ்லாந்து உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விமான சேவையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், கனடாவில் இருந்து ஐஸ்லாந்து நாட்டிற்கு செல்ல 99 டொலர்கள் மட்டுமே கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் இருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள 149 டொலர்கள் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கனடாவின் Montreal நகரில் உள்ள Pierre Elliott Trudeau விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் 2016ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி முதலும், Toronto நகரில் உள்ள Lester B. Pearson விமான நிலையத்திலிருந்து 2016ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி முதலும் இந்த புதிய சிறப்பு கட்டண சேவை தொடங்கப்படும். இந்த இரண்டு விமான நிலையங்களில் இருந்து திங்கள், புதன், வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமானங்கள் புறப்படும். WOW Air விமான நிறுவனத்தின் இந்த அதிரடி சிறப்பு கட்டணம் 2016ம் ஆண்டு முழுவதும் நடைமுறையில் இருக்கும் என அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கட்டணத்திலும் வரி உள்பட அனைத்து விமான நிலைய சேவை கட்டணங்களும் அடங்கும். எனினும், எதிர்பாராதவிதமாக பயணச்சீட்டை மாற்ற வேண்டும் என்றால் 106 டொலரும், கூடுதலான இடத்துடன் இருக்கை வசதி தேவை என்றால் 82 டொலரும், பெரிய அளவில் அதிக எடையுள்ள 3 பைகள்(Luggages) கொண்டு சென்றால் 246 டொலரும், விளையாட்டு மற்றும் இசைக்கருவிகளை கொண்டு சென்றால் 76 டொலரும் கூடுதலாக செலுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies