வெளிநாட்டு நீதிபதிகளா ? ஏற்கவே முடியாது
21 Sep,2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் இலங்கை குறித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கலப்புநீதிமன்ற. விசாரணைகளை நிராபரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகாரப் பிரச்சினை குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அனுபவமும் தகுதியும் உடைய பெரும் எண்ணிக்கையிலான நீதவான்கள் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவார் என அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.இன சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு இன்மையை நீக்கவே கலப்புநீதிமன்றம் ஒன்றினை அமைத்து அதன் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென பரிந்துரை செய்ய ஏதுவானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.