மகிந்த அரசின் முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் இந்த வாரம் விசாரணை!
21 Sep,2015

மகிந்த ராஜபக்ஸவினை தூக்கிலிட வேண்டும்: மதுரை ஆதீனம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினை குற்றவாளி என அறிவித்து, தூக்கில் போட வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோதே மதுரை ஆதீனம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு ஐ.நா அறிக்கை தொடர்பில் நிருபர்களிடம் கூறுகையில்,
பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்த, இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஐக்கிய நாடுகள் சபை குற்றவாளி என அறிவித்து அவரை தூக்கில் போட வேண்டும்.
இவ்வாறு செய்தால்தான், உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இவருடைய கருத்து தற்போது அதிகரித்த சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

மகிந்த அரசின் முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் இந்த வாரம் விசாரணை!
பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த வாரம் மிகமுக்கிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவர்களை சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை செய்யவுள்ளனர்.இந்தக்குழு, சாதாரண ஊழல் குற்றங்களை மாத்திரம் விசாரணை செய்யும் குழு என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அதற்கு மிக முக்கிய அரசியல்வாதிகளையும் விசாரணை செய்யும் அதிகாரம் உள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த குழுவுக்கு முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசாங்கத்தின் அதிகாரிகள் தொடர்பில் பல்வேறு ஊழல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த ஆணைக்குழுவின் மேல்நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன, அமந்திரா விக்கும் களுவாராச்சி, கிஹான் குலதுங்க மற்றும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் பிரேமதிலக்க ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்