தலைமன்னார்- தனுஸ்கோடி தரைப்பாலம் குறித்து ரணிலுடன் இந்தியா பேச்சு!
15 Sep,2015

தலைமன்னார்- தனுஸ்கோடி தரைப்பாலம் குறித்து ரணிலுடன் இந்தியா பேச்சு!
தலைமன்னாருக்கு தனுஸ்கோடிக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளார். மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்றுமாலை சந்தித்துப் பேசியுள்ளார். இதன் போதே பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்படி, இத்திட்டத்திற்காக 5 பில்லியன் டொலர் செலவிடப்பட உள்ளதாகவும், 22 கிலோ மீற்றர் தூரம் வரையில் இந்தப் பாலம் அமைக்கப்பட உள்ளதென்றும், இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி வழங்க தீர்மானித்துள்ளது. அமைச்சர் மட்ட பேச்சுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், செயலாளர் மட்ட பேச்சுகள் நடத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார்

திருமலை, வன்னிக்கு தேசியப் பட்டியல் ஆசனங்கள்! - கூட்டமைப்பின் வழியில் முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் திருகோணமலை மாவட்டத்திற்கும் வன்னி மாவட்டத்திற்கும் வழங்கப்படவுள்ளதாக கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியினால் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் இரண்டையும் எந்த மாவட்டங்களுக்கு பங்கிடுவது என்ற இறுதி முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பீடம் வந்திருப்பதாக தெரியவருகிறது.

அதன் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்திற்கும் வன்னி மாவட்டத்திற்கும் தேசியப் பட்டியல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் அடிப்படையில், தேர்தல் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் கல்குடா, காத்தான்குடி, மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். இதனால் இப் பிரதேசங்களை மையப்படுத்தி தேர்தலில் பலர் குதித்திருந்தனர். இப்போது இக் கட்சியின் முடிவால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.