இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்யக் கூடாது! அதுரலிய ரதன தேரர்
14 Sep,2015

சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளராகிறார் சந்திரிகா!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவி, கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்த நிலையில் அந்த இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவி, கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்த நிலையில் அந்த இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்யக் கூடாது! அதுரலிய ரதன தேரர்
இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையினாலும் இலங்கைக்கு நன்மை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் சீபா உள்ளிட்ட எந்தவொரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டாலும் அது குறித்து முதலில் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். எந்தவொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக நாடாளுமன்றில் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இரசிகயமான முறையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அனுமதிக்கமுடியாது. கடந்த காலங்களில் இந்தியா நடந்து கொண்ட விதத்தை கருத்திற்கொள்ளும் போது எந்த வகையிலும் திருப்தி கொள்ள முடியாது. உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் போது அது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது. இந்தியாவுடனான உடன்படிக்கைகளின் போது நாம் அதனை சரியான முறையில் பின்பற்றிய போதிலும் இந்தியா அவ்வாறு செய்வதில்லை என அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.