தேர்தல் காலத்தில் சட்டத்தை மீறிய 63 பேர் கைது.
19 Aug,2015

தேர்தல் காலத்தில் சட்டத்தை மீறிய 63 பேர் கைது.
தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தல் காலப்பகுதியில் சட்ட மீறல்களில் ஈடுபட்ட 63 பேர் இதுவரையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதன்போது சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட 23 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சட்டவிரோதமான முறையில் வாக்களித்தவர்கள், சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், வாக்காளர்களை அச்சுறுத்தியவர்கள், அழுத்தங்களை பிரயோகித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 8ம் திகதி புரட்சி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பதவியேற்றதன் பின்னால் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.