வெள்ளை கெப் வாகனத்தில் கடத்தப்பட்ட போஸ்டர்கள்.
24 Jul,2015

ராஜிதவின் மகனின் காதலி வெளிநாடு செல்ல தடை.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் ஒருவர் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக கூறப்படும் பாடசாலை மாணவி வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மாணவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க தயாராவதாக மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட 14 பேருக்கு எதிராக மகளின் பொறுப்புரிமையை கோரி பெற்றோர் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் இருப்பதாக கூறப்படும் குறித்த மாணவி அவரது விருப்பத்தின் பேரிலேயே அங்கு இருப்பதாக கூறப்படுகிறது

இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிரிதொரு இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கெப் வாகனத்தில் இருந்து அநுராதபுரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் 4500 போஸ்டர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெபதிகொல்லாவ – கொன்கொல்லாவ பிரதேசத்தில் வைத்து இன்று (24) அதிகாலை 2.20 மணிக்கு குறித்த கெப் வாகனம் மீட்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பரகஸ்வெவ்வெவ பகுதியில் வசிக்கும் ஒருவரது பெயரில் குறித்த கெப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இராணுவ இலக்கத் தகடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கஹடகஸ்திகிலிய மற்றும் மதவாச்சி பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 44 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.