இலங்கை கவிதா இந்தியாவில் கைது.

10 Jul,2015
 

இலங்கை கவிதா இந்தியாவில் கைது.


 

 

இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் வந்த பெண் உள்பட 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காதல் திருமணம்

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் வெட்டிகுளம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் மகள் கவிதா (வயது29). இவர் கடந்த 2007-ம் ஆண்டு மலேசியாவில் வேலை பார்த்தபோது அங்கு கோவிலில் பூசாரியாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் கதவம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு புவிகணேஷ்(8), மோனீஸ்வர்(6), ஹரீஸ்வேல்(4), நிமிலேஷ் (2) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர்.

அதன்பின்னர் கவிதா குழந்தைகளுடன் புதுக்கோட்டை கதவம்பட்டியில் உள்ள ஆறுமுகத்தின் சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் விசா காலம் முடிந்து 1 வருடத்துக்கு மேல் தங்கிய கவிதா தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவும், விசா பெறவும் கடந்த மாதம் 16-ந்தேதி இலங்கை சென்றார்.

அங்கு பாஸ்போர்ட்டை புதுப்பித்து விசா பெற முயன்றபோது இலங்கை அரசு அதற்கு மறுத்துவிட்டது. இதையடுத்து கடந்த 8-ந்தேதி இரவு கவிதாவின் தந்தை அவரையும், மன்னார் மாவட்டம் எருக்காம்பட்டியை சேர்ந்த இபுரா£கிம் மகன் ஷிஐபூ என்பவரையும் கள்ளத்தனமாக படகில் ஏற்றி தமிழகத்துக்கு அனுப்பி வைத்தாராம்.

ஷிஐபூவுக்கு திருமணம் முடிந்து 4 குழந்தைகள் உள்ளனர்.

கைது

இதையடுத்து நேற்று அதிகாலை 6 மணிக்கு அவர்கள் 2 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கடற்கரையில் வந்து இறங்கினர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் புதுக்கோட்டை செல்ல தொண்டி பஸ்நிலையத்துக்கு சென்றனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கியூபிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ராமநாதபுரம் கியூபிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் கைதுசெய்தனர்.

கவிதாவிடம் இருந்து 3 பாஸ்போர்ட்டுகள், இலங்கை தேசிய அடையாளஅட்டை, ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் பணம், பான்கார்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அடையாளஅட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, சவுதி ரியால் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies