டொரண்டோ: அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பரிதாப பலி
07 Jul,2014

.
டொரண்டொவில் உள்ள downtown பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
நேற்று காலை டொரண்டோவில் அதிகாலை 2 மணியளவில் George Street, near Dundas and Jarvis என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஒருநபர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த டொரண்டோவை சேர்ந்த 36 வயது Rala Federick, என்பவரை கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 37 வயது நபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இவர் தற்போது டொரண்டோவில் உள்ள St. Michael’s Hospital என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கறுப்பு நிறத்திலும், வயது 20 ல் இருந்து 30 வரையிலும் இருப்பவர் என்றும் ஐந்தடி உயரத்தில் மிகவும் கட்டுமஸ்தான உடலமைப்பை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. கொலையாளி குறித்த தகவல்கள் தெரிந்தால் உடனடியாக 416-808-510-0, or at Crimestoppers at 416-222-8477 என்ற எண்களுக்கு தகவல் கொடுக்கும்படி போலீஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.