லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முழங்கால் அளவுக்கு வெள்ளம்போல் ஓடிய கச்சா எண்ணெய். பெரும் பரபரப்பு VIDEO
15 May,2014
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முழங்கால் அளவுக்கு வெள்ளம்போல் ஓடிய கச்சா எண்ணெய். பெரும் பரபரப்பு
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குரூட் ஆயில் எனப்படும் கச்சா எண்ணெய் வெள்ளம் போல சாலையில் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Atwater Village area என்ற பகுதியில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த குழாய் ஒன்றில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்தது. நேரம் ஆக ஆக மிகப்பெரிய அளவில் கசிய ஆரம்பித்ததால், சாலையில் வெள்ளம் போல கச்சா எண்ணெய் ஓடியது. ஒருசில பகுதிகளில் முழங்கால் அளவுக்கு கச்சா எண்ணெய் சாலையில் ஓடியதாக தகவல்கள் கூறுகின்றன
அரை மைல் தூரத்திற்கு வெள்ளம் போல ஓடிய கச்சா எண்ணெய், சுமார் 2மில்லியன் லிட்டர் அளவு இருக்கும் என மீட்புப்படையினர் தெரிவித்தனர். கசிவு ஏற்பட்ட பகுதியை சரிசெய்ய மீட்புப்படையினர்களும், பொறியியல் வல்லுனர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் யாருக்கும் எவ்வித காயமில்லை எனினும், அந்த பகுதியில் யாரும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.