கனடாவில் பட்டப்பகலில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு. ஒருவர் பலி.டிரக் மீது வேன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலி
04 May,2014

கனடாவில் பட்டப்பகலில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு. ஒருவர் பலி.
கனடாவில் பட்டப்பகலில் பிசியாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு வணிக வளாகத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு காரில் தப்பித்து ஓடிய மர்ம மனிதனை கனடா போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கனடாவின் Vaughan பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 7 அருகில் உள்ள Weston Road என்ற இடத்தில் Colossus Drive என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகம் நேற்று மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது, மாலை 4.30 மணியளவில் க்ரே நிற காரில் வந்த ஒரு மர்ம மனிதன், மிக வேகமாக வணிக வளாகத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, மின்னல் வேகத்தில் காரில் ஏறி தப்பித்து சென்றுவிட்டான்.
போலீஸார் இதுகுறித்த தகவல் தெரிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். குண்டடிபட்டு படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இவர் யார் என்று தெரியவில்லை.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் உடனடியாக York Police Homicide Unit at 1-866-876-5423 ext. 7865 or call Crime Stoppers at 1-800-222-TIPS என்ற எண்களுக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
ஒண்டோரியோவில் உள்ள QEW (Queen Elizabeth Way) பகுதியில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து அமைச்சகத்துக்கு சொந்தமான டிரக் மீது வேன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வேன் டிரைவர் பரிதாபமாக பலியானார்.
கனடாவில் உள்ள Queen Elizabeth Way பகுதியில் உள்ள Dixie Road என்ற இடத்தில் போக்குவரத்து அமைச்சகத்துக்கு சொந்தமான டிரக் ஒன்று நிறுத்தி வைக்கபப்ட்டிருந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு இந்த வழியாக வந்த வேன் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த டிரக் மீது மோதியதால் வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரக் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
பலியான வேன் டிரைவர் Beeton என்ற பகுதியை சேர்ந்த 25 வயது ஆண் என்றும், அவரது பெயர் மற்றும் சில விபரங்கள் குறித்து விசாரணை செய்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக Hurontario Street and Dixie Road சாலைகள் பலமணி நேரம் மூடப்பட்டது.