சுவிஸில் தபால்களை பிரிப்பவர்கள் நடத்திய திருட்டு
சுவிட்சர்லாந்தில் தபால்களை பிரிப்பவர்கள் 1,14,000 டாலர்கள் மதிப்புள்ள கருவிகளை திருடியுள்ளார்.
லுசேன் வாயூத் மண்டலத்தில் உள்ள சுவிஸ் தபால் அலுவலகத்தின் தேசிய அஞ்சலக ஆபரேட்டர்களாக பணிபுரியம் இரண்டு நபர்கள் 1.00,000 பிராங்குகள் (1,14,000) டொலர்கள் மதிப்புள்ள பொருட்களும், கருவிகளும் அடங்கிய பார்சல் பெட்டிகளை அபகரித்து திருடி சென்றுள்ளனர்.
இந்த இரண்டு திருடர்கரும் 40 வயது மிக்க எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் என்று NORD வாயூத்மண்டல நீதிமன்றம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் திருடிய பொருட்களை, அவர்களது குடியிருப்பில் பதுக்கி வைத்ததன் மூலம் பொலிசார் அவர்களை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.
இந்த திருடர்கள் இருவரும் நீதிமன்றத்தில் தங்களது திருட்டினை நியாயப்படுத்தும் வகையில், தாங்கள் பகுதி நேர ஊழியர்கள் என்றும், தங்களுக்கு சம்பளம் போதிய அளவு இல்லாததால் இவ்வாறு திருடியதாக கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் இவர்களுக்கு 18,000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
மக்கள் சம்மதத்துடன் அரங்கேறவுள்ள விமான ஒப்பந்தம்
ஸ்வீடன் நாட்டுடன் செய்யவிருக்கும் விமான ஒப்பந்தம் குறித்து சுவிஸ் நாட்டு மக்களிடம் வாக்குகள் சேகரிக்கப்படவுள்ளன.
சுவிட்சர்லாந்து கடந்த 2008ம் ஆண்டு தனது இராணுவ விமானத்தை 54 F-5 Tiger jets ஏலத்தில் விட முன்வந்தது.
இதனை எடுக்க பிற நாடுகளிலிருந்து பல நிறுவனங்கள் முன்வந்த நிலையில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரிபேன் தயாரிப்பாளர் நிறுவனம், 22 விமானங்களை 3,1 பில்லியனுக்கு எடுக்க முன்வந்துள்ளது.
இதற்கான ஒப்புதல் அளிக்கும் தேர்தல் வருகிற மே 8ம் திகதி நடக்க உள்ளது. இதில் சில மக்கள் தமது நாட்டுக்கு போர் விமானங்கள் வேண்டாம் என்றும், சிலர் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் விமானம் தயாரிப்புக்கான தொகை அதிகமாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஒப்புல் வாக்குகள் முடிந்தால் தான் விமானங்களின் நிலைமை தெரிய வரும்.
சுவிட்சர்லாந்து 2010ம் ஆண்டில் F/A-18 என்ற 32 விமானங்களை கணிசமான செலவில் மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்க்கது
சுவிஸில் முதலைக்கறியை கடத்திய பிரெஞ்சுக்காரர்கள்
சுவிஸ் நாட்டில் வாழும் பிரெஞ்சுக்காரர்கள் முதலைக் கறியை கடத்துகையில் பிடிபட்டுள்ளனர்.
பேசல் மாகாண கடற்கரையில், 16 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்டுள்ள மிருகங்களின் இறைச்சியுடன், பிரான்ஸிலிருந்து சுவிட்சர்லாந்திற்குக் கடத்திக் கொண்டு வருகையில், இந்தப் பிரெஞ்சுக்காரர் பிடிபட்டுள்ளனர்.
சுங்க இலாகா அதிகாரிகள் இவர்களின் வாகனத்தை சோதனையிட்டதில், காரின் பின் பகுதியில் ஒரு சூட்கேசில் உள்ள பிளாஸ்டிக் பைகளில் ஒரு பாம்பின் தலைப்பகுதியும், 9 துண்டுகளாக்கப்பட்ட முதலைக்கறி இறைச்சிகளும் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
விசாரணைக்குப் பிறகு, இந்த இறைச்சிகள் மத்திய மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டிலிருந்து கடத்தி வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே சுங்க இலாகா அதிகாரிகள், இந்த மிருகங்களின் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.
மக்களின் உணவுப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இந்த அபாயகரமான நச்சுத்தன்மை, நிறைந்த உணவு வகைகளை யாரும் தெரியாமல் உட்கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால், இதை சுகாதார நலன் கருதி அழித்து விட கட்டளையிடப்பட்டுள்ளது.
கேமரூனில் முன்பு வாழ்ந்தவர்கள், தற்போது சுவிட்சர்லாந்தில் குடிபுகுந்த போதிலும் ஆப்பிரிக்காவில் தாங்கள் சாப்பிட்ட மேற்கு ஆப்பிரிக்க, இவ்வகையான மிருக இறைச்சிகளை சாப்பிட விருப்பத்துடன் இந்த முதலைக்கறிகளையும், பாம்புக் கறிகளையும் கடத்தி வருவதாக விசாரணையில் சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
நோயாளியின் தற்கொலைக்கு உதவி செய்த மருத்துவர்
சுவிட்சர்லாந்தில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் தற்கொலைக்கு உதவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் மருத்துவமனை ஒன்றில் 89 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இவரால் வலி தாங்க முடியாத காரணத்தால், தன்னை கொன்றுவிடுமாறு மருத்துவரிடம் வேண்டியுள்ளார்.
இவரின் வேண்டுகோளுக்கிணங்கிய மருத்துவரும் சுவிஸில் தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் சோடியம் பென்டோபார்பிடல் மருந்தினை அவருக்கு கொடுத்ததைத் தொடர்ந்து அந்த நோயாளி மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவரின் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 500 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனது வாட்ச் விலையுயர்ந்ததல்ல: வாதாடும் அதிகாரி
இந்தோனேசிய இராணுவ தலைமை அதிகாரி சுவிஸின் விலைமதிப்புள்ள கடிகாரம் அணிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த இராணுவ தலைமை அதிகாரி மோல்டோகோ என்பவர், சுவிஸில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த கடிகாரத்தை கையில் அணிந்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது.
ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார், இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த கடிகாரத்தை எடுத்து உடைத்துகாட்டி, மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை யாராவது இப்படி உடைப்பார்களா? இது சீனாவில் 430 டொலர்களுக்கு வாங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
இருப்பினும், அந்நாட்டு மக்கள் வறுமையில் வாடும்போது, உயர் அதிகாரிகள் விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் அமைச்சருடன் மத்திய அரசு ஆலோசனை: கருப்பு பண விவகாரம்
சுவிஸ் - இந்தியா கருப்பு பணம் தொடர்பான தகவல் பறிமாற்றம் குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஐரோப்பிய நாடுகளிலுள்ள வங்கிகளில் குறிப்பிட்ட கணக்குகளில் இருக்கும் கருப்பு பணம் குறித்த தகவல்களை பறிமாறிக்கொள்ள சுவிஸ் நாட்டுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கருப்பு பணம் குறித்த தகவல்களை அனுப்பும்படி ஏற்கனவே சுவிஸ் நிதி அமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதத்திற்கு பதில் வந்தது. அந்த கடிதத்திற்கு இன்னும் சில தினங்களில் பதில் கடிதம் அனுப்பப்படும்.
சுவிஸ் நாட்டிலுள்ள வங்கி கணக்கு தொடர்பாக சுவிஸ் நிதி அமைச்சர் எவலின் இடமிருந்து ஒரு வாரத்திற்கு முன் பதில் கடிதம் வந்தது.
இதுகுறித்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கடிதம் எழுதப்படும். சுவிஸ் அமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்தில் நீண்ட பதில் இடம்பெற்று இருக்கிறது. சுவிஸ்நாட்டின் சூழ்நிலை குறித்தும் அதில் சுவிஸ் அமைச்சர் விவரித்து இருக்கிறார் என்றும் அதுகுறித்து மிக கவனமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.