இணையதள ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்த சூரிச் இன்சூரன்ஸ்
24 Apr,2014
இணையதள ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்த சூரிச் இன்சூரன்ஸ் சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள இன்சூரன்ஸ் ஆய்வறிக்கையின்படி, பெரிய இணையத்தள ஆபத்துக்கள் நிதித்துறையில் ஏற்படக் கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2008ம் ஆண்டு உலகை உலுக்கிய நிதி நெருக்கடி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதைப் போன்றே, இந்த இணையத்தள ஆபத்துக்களும் இருக்கும் என இந்தஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. மேலும், இந்த சூரிச் இன்சூரன்ஸ் ஆய்வு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இணையத்தள பாதுகாப்பு நிபுணர்களாலும், அறிந்து கொள்ள இயலாத அளவிற்கு ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்பட்ட அபாயங்களை மிகப் பெரிய நிதி நிறுவனங்கள் சந்திக்க வேண்டிய அபாயம் குறித்து எச்சரித்துள்ளது. இவ்வறிக்கையின் படி, 2008ம் ஆண்டில் நிலவிய நிதி நெருக்கடிக்கு ஒத்த அளவில், ஒரு நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது. மேலும் சூரிச் சைபர் அபாய அறிக்கையின் படி, வங்கியில் சொத்துக்கள் அடமானங்களில் சிக்கல் ஏற்பட்டு ரியல் எஸ்டேட் வியாபாரங்கள் பாதிப்புக்குள்ளாவதையும், பங்கு சந்தை வியாபாரங்கள் பாதிக்கப்படுவதையும் குறித்து எச்சரித்துள்ளது. மேலும் வேலைகளை அவுட் சோர்சில் செய்வதால் ஏற்படும் அபாயம் குறித்தும் எச்சரித்துள்ளது. பிரிட்டிஷ் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த சுவிஸ் சுவிஸ் நிறுவனமான நோவார்ட்டிஸின் நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பிரிவை பிரிட்டிஷ் நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் ஏழு பில்லியன் டொலர்களுக்கு வாங்கியுள்ளது. உலகின் இரண்டு முன்னணி மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்களான நோவார்டிஸும் கிளாக்ஸோ ஸ்மித்க்ளைனும் ஒன்றின் தொழில் பிரிவை மற்றொன்று வாங்கும் விதமாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அந்த உடன்பாட்டின்படி மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் வாங்கக் கூடிய மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை கூட்டாக தயாரித்து விற்பார்கள். தம்மிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு மற்றும் வர்த்தப் பரிமாற்றம் மூலம் இரண்டு நிறுவனங்களும் அதன் பங்குதாரர்களும் பயனடைவார்கள் என கிளாக்ஸோவும் நோவார்ட்டிஸும் அறிவித்துள்ளன. மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம் நோவார்ட்டிஸ் நிறுவனம் தனது கால்நடை மருந்துப் பிரிவை லில்லி நிறுவனத்துக்கு 5.4 பில்லியன் டொலருக்கு விற்க உடன்பட்டுள்ளது
. தன்னம்பிக்கையுடன் வலம் வரும் சுவிஸ் அழகி (வீடியோ இணைப்பு) SERAPHINE CONTRACTOR என்ற பெயருடைய 20 வயது சுவிஸ் பெண்
எதனையும் பற்றி கவலை கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் வலம்வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் நடந்த மிஸ் சுவிட்சர்லாந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சுற்றுகளை வெற்றிகரமாக கடந்து இறுதிச் சுற்றில் 18 நபர்களுடன் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர் ஆவார். அத்துடன் விளையாட்டு போட்டிகளில் மிக ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வீராங்கனையும் ஆவார். மேலும் மொடலிங் அழகியாக திகழ்கின்ற போதிலும் அவருக்கு இரண்டு காதுகளில் ஒரு காது மட்டுமே கேட்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதை பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் மிக சுறுசுறுப்புடன், சிரித்த முகத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆசிய உணவுகளை விரும்பி சாப்பிடும் SERAPHINE, ஆசியாவிலுள்ள ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.