சுவிசில் மனைவி மீது குண்டு வீசிய கணவன்
.
சுவிசில் மனைவி மீது குண்டு வீசிய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிசின் ஆர்கு மாகாணத்தில் உள்ள போஸ்னிய நாட்டை சேர்ந்த 55 வயது நிரம்பிய நபர் கடந்த 6ம் திகதி தனது மனைவி (59) மீது குண்டு வீசியுள்ளான்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணின் வயிற்றில் குண்டு வெடித்து சிதறிய பொருட்களை, பார்த்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை அளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலிசார், நேற்று அப்பெண்ணின் கணவரை இத்தாலிய நாடு எல்லைப்பகுதியில் மடக்கி பிடித்துள்ளனர்.
இதுகுறித்து இந்நபரிடம் நடத்திய விசாரணையில், இக்குண்டு யூகோஸ்லாவியாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. எனினும் எந்த காரணத்திற்காக இந்த கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியது என்பது தெரியாததால் பொலிசார் இந்நபரிடம் தொடந்து தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
சுவிசில் வங்கி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் பொலிசார் தீவிர விசாரணை
.
சுவிசில் வங்கி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுவிசில் “தி ஃபரிக் பாங்க்” என்ற வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜர்ஜென் ஃபிரிக்(48) என்பவரை அவ்வங்கியில் நிதி உரிமையாளராய் பணியாற்றி வரும் ஹெர்மன் என்ற நபர் நேற்று கொலை செய்துள்ளான்.
இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில ஆதரங்கள் சீசீடி காமெராவின் மூலம் கிடைத்துள்ளன.இதனை ஆராய்க்கையில், ஹெர்மன் அந்த வங்கியிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் காத்திருந்து தலைமை நிர்வாக அதிகாரி வருகையில் மூன்று முறை துப்பாக்கிச்சூட்டை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தப்பிய ஓடிய ஹெர்மன் தனது காரில் விரைவாக தப்பித்து சென்று சுவிஸ் எல்லைப் பகுதிக்கு சென்றுள்ளார் என்றும் அங்கு அவரது கார் பொலிசாரால் கண்டறிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் சந்தேகிக்கின்றனர்.எனினும் இச்சம்பவம் தொடர்பாக சரியான ஆதாரங்கள் கிடைக்க தீவிர தேடுதல் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
எல்லையில்லாமல் போகும் கரடியின் அட்டகாசம்
.
சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி மீண்டும் மற்றொரு குட்டியை கொன்றது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள உயிரியல் பூங்காவில் மிஷா, மாஷி கரடிகளுக்கு கடந்த ஜனவரி 15ம் திகதி இரண்டு ஆண் கரடி குட்டிகள் பிறந்தது.
இதில் தந்தை கரடியான மிஷா கடந்த 3ம் திகதியில் தனது குட்டியை தூக்கி போட்டு விளையாடி கொண்டிருக்கையில் எதிர்பாரதவிதமாக அக்குட்டி கிழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்நிலையில் நேற்று மற்றொரு கரடி குட்டியையும், தந்தை கரடி அதேபோல் விளையாடி கொன்றுள்ளது.இதனால் பூங்காவின் மேலாளர்கள் வனவிலங்கு துறையினர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகள் கூறுகையில், முதலில் இக்கரடி தனது குட்டியை கொன்ற போதே பூங்காவின் மேலாளர்கள் அதனை தனிமைப்படுத்திருக்க ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும் அவர்களது அலட்சியமே இந்த இரண்டாம் கரடி குட்டியின் உயிரிழப்பிற்கு வழிவகுத்துள்ளது எனவும் கடுமையாக கூறியுள்ளனர்.
மேலும் பெர்ன் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கான போதிய வசதிகள் ஒன்றும் இல்லை என வனவிலங்கு துறையினர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.