பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய இசைவேள்வி கர்நாடகசங்கீதப் போட்டி 2014

01 Apr,2014
 


பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய இசைவேள்வி கர்நாடகசங்கீதப் போட்டி 2014
.


பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழத்தால் 3 வது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீதப்போட்டி 30.03.2014 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கிளிச்சி மாநகரத்தில் காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மாவீரர் நினைவு ஈகைச்சுடரினை 2008 ல் முருகண்டிப்பகுதியில் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட வீரவேங்கை கப்ரன் மண்சீலன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைத்தார். அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தாயக வணக்க நிகழ்வுக்கு அடுத்ததாக நிகழ்வுகளுக்கான மங்கள விளக்கேற்றலினை தமிழர் கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர் திரு. சுதர்சன், கர்நாடக சங்கீதப்போட்டி ஒருங்கமைப்பாளரும் மிருதங்க ஆசிரியருமான திரு. கட்சன் அவர்களும், இப்போட்டியின் நடுவர்களாக கலந்து கொண்ட பிரான்சு நீஸ் பிரதேசத்திலிருந்து வந்த கர்நாடக சங்கீத பாடகர், ஆசிரியர், இசையமைப்பாளர் திரு. நந்தகோபன் அவர்கள், சங்கீத பூசனம் யாழ் வட இலங்கை சங்கீதசனை, மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் திரு. க. சேயோன் அவர்கள், பிரித்தானியாவில் இருந்து வந்த சங்கீத சிரேன்மணி அண்ணாமலை பல்கலைக்கழகம் கர்நாடக சங்கீதம், வயலின், வீணை ஆசிரியர் திருமதி. தனபாலசிங்கம் விமலேசுவரி அவர்கள், மற்றும் விபுலானந்த இசைக்கல்லூரி நுன்கலைப்பிரிவு பட்டதாரி ஆசிரியர் திருமதி. அன்புமொழி சந்தியாபிள்ளை ஆகியோரும் ஏற்றி வைத்து நடவர்களாகவும் கடமையாற்றினர்.

ஆரம்ப நிகழ்வாக வரவேற்புரையையும், விதிமுறைகளையும், கர்நாடக சங்கீத ஒருங்கமைப்பாளர் திரு. கட்சன் அவர்கள் வழங்கியிருந்தார். கலைபண்பாட்டுக்கழக அறிவிப்பாளர் திரு. விநோச் அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பினை வழங்கி இந்தப்போட்டிகள் எதற்கான என்ன நோக்கத்தை கொண்டவை என்பது பற்றியும் இப்போட்டிகளில் பங்குபற்றி போட்டியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்றுக்கொண்டதோடு, நடுவர்களை தமிழர் கலைபண்பாட்டுக்கழக பொறுப்பாளர் மதிப்பளித்து வைத்துப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போட்டிகள் முறையே வயலின், வீணை, மிருதங்கம், வாய்ப்பாட்டு, தனி, குழு என்பன நடைபெற்றது.

மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்து கொண்டிருந்தனர். பிரான்சில் நடைபெற்றுவரும் மாநகரசபைத் தேர்தல் இன்றைய நாள் 2 வது சுற்று வாக்களிக்கும் நாளாக இருந்தமையால் பல பெற்றோர்கள் வாக்களிக்கச் செல்லவேண்டி நிலையிலும், மண்டபம் நிறைந்த மக்களாகவே தொடர்ந்து காணப்பட்டது.

புலம்பெயர் வாழ்வு, மொழி, நாகரீகம் என்பவற்றிற்கு மத்தியில் ,பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகளுக்கு இயல், இசை, நாடகம், என்கின்ற முத்தமிழை பயிற்றுவிப்பதுவும், பிள்ளைகளும், பயபக்தியுடன் பயின்று வருவது அவர்கள் தமது இனத்துக்கும், மொழிக்கும், மண்ணுக்கும் செய்கின்றதொரு கடமையாகவே பார்க்க வேண்டும்.

இது இங்கு மாத்திரம் அல்ல தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெறுவது சிறப்புக்கும், பாராட்டுதலுக்குமுரியதாகும். இசைவேள்வி நிகழ்வில் உரையினை பிரான்சு தமிழ்ச்சோலைகளின் தலைமைப்பணியகத்தின் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன் அவர்கள் ஆற்றியிருந்தார்.

அவர் தனதுரையில் பிள்ளைகளின் உற்சாகத்தையும், அதற்கு ஊக்கமளித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகளையும் நன்றி தெரிவித்திருந்தார். தொடர்ந்து எமது குழந்தைகள் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்க ஊக்கமும், ஆக்கமும் எல்லோரும் எல்லாதரப்பிலும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசில்களை, நினைவுப்பதக்கங்களையும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன் மற்றும் உறுப்பினர்கள், தமிழர் தொலைக்காட்சி நிகழ்ச்சிச் தொகுப்பாளர் திரு.கணேசு தம்பையா, கிளிந்சி தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர் திரு. பரா அவர்கள், மற்றும் கலைபண்பாட்டுக்கழப்பொறுப்பாளர் திரு. சுதர்சன், மற்றும் நடுவர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.

போட்டிகள் முடிவுகளும், வெற்றி பெற்ற போட்டியும், போட்டியாளர்களும் :-

வாய்ப்பாட்டு கீழ்ப்பிரிவு

1ம் இடம்: சிறீரங்கன் கரிணி
2ம் இடம் : சுரேஸ்குமார் சாகித்தியன்
3ம் இடம் : மதிவாணன் அஐவிதா

மத்தியபிரிவு

1ம் இடம் : சுதேஸ்கரன் வருசினி
2ம் இடம் : பிரசன்னா விதுசா
3ம் இடம் : தெய்வேந்திரன் கரிகரணி

மேற்ப்பிரிவு
1ம் இடம் : எட்வேட் லூயிஸ் அநோஜினி
2ம் இடம் : சிவானந்தராஜா ராம்
3ம் இடம் : சிவானந்தராசா ஆரபி

அதிமேற்ப்பிரிவு

1ம் இடம் : திலீப்குமார் திசானிகா
2ம் இடம் : கோகுலதாஸ் சூரியா
3ம் இடம் : சோதிராசா சோனா

அதிஅதிமேற்ப்பிரிவு

1ம் இடம் : மதனராஜ் தீபனி
2ம் இடம் : ராஐலிங்கம் றோசான்
3ம் இடம் : நாகராசா சரணியா
 வயலின் ( தனி ) மத்திய பிரிவு
1ம் இடம் : சிவராசா மதுரா
2ம் இடம் : சிவானந்தராசா குந்தவி
3ம் இடம் : பிரேமதாசா ஆர்த்தனா

மேற்ப்பிரிவு

1ம் இடம் : பகிதரன் பிரகாஸ்
2ம் இடம் : தேவன் அகிதன்
3ம் இடம் : விஐயரட்ணம் யசுதன்

அதிமேற்ப்பிரிவு

1ம் இடம் : குணரட்ணம் சங்கவி
2ம் இடம் : கோகுலதாசு சூரியா
3ம் இடம் : செல்வக்குமார் சிந்தியா

அதிஅதி மேற்பிரிவு

1ம் இடம் : ராமகிருஸ்ணன் சுலக்சா
 மிருதங்கம் ( தனி ) மேற்பிரிவு
1ம் இடம் : சிவராசா மதுசன்
2ம் இடம் : சிற்சபேசன் ஆகாஸ்
3ம் இடம் : சார்ல்ஸ் கொன்ஸ்ரன் மெல்வின்
3ம் இடம் : முருகதாஸ் செமூசன்

அதிமேற்பிரிவு

1ம் இடம் : நித்தியானந்தன் விஸ்ணுகரன்
2ம் இடம் : மார்க்கண்டு றொனோல்ட்

அதிஅதிமேற்பிரிவு

1ம் இடம் : செல்வக்குமாரன் விநோசாந்
2ம் இடம்; : விஐயரட்ணம் விதுனன்
3ம் இடம் : கருணாகரன் சாரங்கன்

வீணை அதிமேற்பிரிவு

1ம் இடம் : நடராஜா பானுஜா
2ம் இடம்; : ஜெயக்குமார் nஐர்சகா
3ம் இடம் : நடராசா ஆசா

வயலின் ( குழு) கீழ்ப்பிரிவு

1ம் இடம் : சோதியா கலைக்கல்லூரி
2ம் இடம்; : ஓன்லி சூபா, திறான்சி தமிழ்ச்சோலை
3ம் இடம் : தனிநபர் கலைக்கல்லூரி

வயலின் குழு மத்தியபிரிவு

1ம் இடம் : நோசலிக்குரோன் தமிழ்ச்சோலை
2ம் இடம்; : ஓன்லிசூபா, திறான்சி தமிழ்ச்சோலை
3ம் இடம் : சோதியா கலைக்கல்லூரி

வாய்ப்பாட்டு கீழ்பிரிவு

1ம் இடம் : இசைக்கதம்பம் கலைக்கல்லூரி
2ம் இடம் : திறான்சி தமிழ்ச்சோலை
3ம் இடம் : செவரோன் தமிழ்ச்சோலை

வாய்ப்பாட்டு மேற்பிரிவு

1ம் இடம் : தனியார் ( திறான்சி )
2ம் இடம் : தனியார் ( திறான்சி )

அனைத்து போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றது. போட்டியாளர்களும், பெற்றோர்களும் மிகுந்த சந்தோசத்துடன் சென்றிருந்தனர். எமது தாய் மண்ணின் அற்புதமான கலைஞர்கள் எல்லாமே புலம்பெயர் மண்ணில் தங்கள் சந்தோசங்களையும், பசுமையான நினைவுகளையும் மனதுக்குள் புதைவிட்டு தங்களின் திறமைகள் வெளிக்கொண்டுவரப்படாமலே , சொல்லப்படாமலே உலகைவிட்டு பிரிந்து விடுகின்றனர்.

இதற்கு காரணமும் உண்டு புலத்துத்தமிழர்களும், ஒருசில அமைப்புகளும் தாயக கலையையும், கலைஞர்களையும் தேடுவதில்லை, மாறாக இந்திய கலைஞர்களையும், அவர்களை ஊக்கிவிப்பதையும், பொருளாதார உச்சநிலைக்கு கொண்டு சென்று தமக்கு புகழ்தேடுவதிலேயே நிற்கின்றனர் ஆனாலும் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் எம்தேசக்கலைஞர்களை ஊக்குவிப்பதும், புகழோடு வாழ்ந்து புகழ்இன்றி உயிர் பிரிவதற்கு முன்பு இலைமறைகாய்போல் உள்ள எங்கள் தாயகக்கலைஞர்களை அவர்கள் வாழும்நாளில் அவர்களின் இறுதிக்காலங்களில் அவர்களின் திறமைகளை அடுத்துவரும் சந்ததிக்கு காட்டுவதும், ஆசிகளை அடுத்த கலைவாரிசுகளுக்கு பெற்றுக்கொடுப்பதென்பது ஒரு மகாத்தான சேவையும், செயற்பாடுமாகும். அதை சரிவரச் செய்துவருகின்றார் இதனை இவர்கள் செய்யாது விட்டால் யார் செய்வார்கள் இதுவும் அவர்களுக்குரிய ஒரு வரலாற்றுக் கடமையாகும்.


பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினரின் பொது மக்களுடனான சந்திப்பு
.


ஐ. நா மனிதவுரிமைகள் அவையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்த கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் மக்கள் சந்திப்பு, தமிழீழ மக்கள் பேரவை – பிரான்ஸ் இன் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் தமிழீழ மக்கள் பேரவை – பிரான்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு அப்படியே வருமாறு,

• நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழர்க்கு நன்மை பயக்கும் வகையில் நடைமுறைப்படுத்திட நாம் என்ன செய்ய வேண்டும்?

• தீர்மானம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாகுமா? தமிழர்களின் அடுத்த நகர்வு என்ன?

• புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளை ‘பயங்கரவாத’ முத்திரை குத்தி தடை செய்யக் கிளம்பியுள்ள சிறிலங்கா அரசினது முயற்சிகளை எவ்வாறு முறியடிப்பது?

இவை போன்ற பல கேள்விகளுக்கு ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்ற மக்களவைப் பிரதிநிதிகள் மற்றும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் பதிலளிக்கவிருக்கிறார்கள்.

இந் நிகழ்வில் பங்கேற்று உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

இடம்: 16 Rue d’Enghein 75010 Paris

(https://www.google.fr/maps/@48.8715439,2.352722,19z?hl=fr)

Metro : Strasbourg Saint Denis (Ligne 4,8,9) Chபூteau d’Eau (Ligne : 4)

நேரம்: மாலை 4:00

தொடர்பு: 06 52 72 58 67- 06 60 67 59 71

 

நகராட்சித் தேர்தலில் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய பிரான்ஸின் ஆளும் சோஷலிசக் கட்சி
.


பிரான்ஸ் நாட்டில் ஆட்சி பீடத்திலிருக்கும் சோஷலிசக் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகராட்சிப் பிரிவுகளுக்கான இரண்டாம் சுற்றுத் தேர்தலிலும் கசப்பான தோல்வியைத் தழுவியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாகக் கிடைத்த தேர்தல் முடிவுகளின்படி, ஆளும் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பல நகரப்பிரிவுகளில் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளதாக அக்கட்சிகளின் பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியானது, பிரான்ஸ் அரசின் மந்திரி சபையை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது போல் மாற்றியமைக்கும்படி விதித்து நிற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தற்போதைய ஜனாதிபதி கொலந்தின் இரண்டு வருட ஆட்சிக்காலத்தில், மக்கள் முன்னைய எந்த அரசின் மீதும் இழக்காத அளவிற்கு தற்போதைய அரசில் நம்பிக்கை இழந்துவிட்டதனை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.

பழமைவாதக் கொள்கைகளை முன்னெடுக்கும் ஐக்கிய மக்கள் இயக்கக் கட்சியின் (UMP) தலைவர், தம் கட்சி அலையானது பிரான்ஸ் முழுவதிலும் பரவியுள்ளதாகப் பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன் இடம் பெற்ற 37,000 நகராட்சிப் பிரிவுகளுக்கும், கிராம சபைகளுக்குமான தேர்தலிலும், இறுதியாக நடந்து முடிந்த 6000 நகராட்சிப் பிரிவுகளுக்கும், கிராம சபைகளுக்குமான தேர்தலிலும் பல ஆட்சி மன்றங்களை எதிர்கட்சியான UMP கட்சி கைப்பற்றியதும், ஒரு சிலவற்றை வலது சாரிக் கட்சியான தேசிய முன்னணி (FN) கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் இன் முதல் பெண் மேயராக ஆன்னி ஹிடால்கோ தேர்வு (Photos)
.


பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகர மேயர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியின் ஆன்னி ஹிடால்கோ தேர்வாகி உள்ளார்.

இவர் பாரிஸ் நகரின் முதல் பெண் மேயர் ஆவார்.

நேற்று நடந்த 2வது கட்ட தேர்தலில் 54 வயதான ஹிடால்கோ 54.5 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட நத்தாலி கோசியஸ்கோ 45.5 சதவீத ஓட்டுக்களை பெற்றார்.

 

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 2 ஆவது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி பிரான்ஸில்
.


தமிழர் உள்ளரங்க விளையாட்டு அமைப்பு – பிரான்ஸ் இன் ஏற்பாட்டில் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2 ஆவது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி பிரான்ஸில் ஏப்பிரல் மாதம் 19, 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

ஆண், பெண் இருபாலாரும் பங்குபற்றும் இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்கு வயதெல்லை கிடையாது.

போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுடையவர்கள் விண்ணப்ப முடிவுத் திகதியான 11.04.2014 வெள்ளிக் கிழமைக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விழாவின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலதிக விபரங்களை கீழே பார்க்கலாம்,


 பிரான்சின் புதிய பிரதமராக மனுவல் வால்ஸ்  .

 

பிரான்சின் ஐந்தாவது குடியரசின் அடுத்த பிரதமராக முன்னாள் உள்துறை அமைச்சர் மனுவல் வால்சினைப் பிரதமராக நேற்று இரவு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் அறிவித்தார்.

இன்று அரசாங்கம் இருக்கும் நிலையில் மிகவும் இறுக்கமான ஒரு அணியுடன் மிகவும் போராட்டமான அரசாங்கத்தை சக்திவாய்ந்த ஒருவர் தலைமை வகிக்க வேண்டும். அதற்காகவே மனுவல் வால்சிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதாக ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் தெரிவித்தார்.

 

கடந்த சிலகாலங்களாக மிகவும் அர்ப்ணிப்புடனும் விரைவான நடவடிக்கைளுடனும் பல எதிர்ப்புகளிற்கு மத்தியிலும் மனுவல் வால்ஸ் பணியாற்றி இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 2011 இல் ஜனாதிபதி வேட்பாளராக நின்று வெறும் 6 சதவீத வாக்குகளையே வென்றிருந்தாலும் அண்மைக்காலக் கணக்கெடுப்புக்களில் பிரெஞ்சு மக்களால் பெரிதும் விரும்பப்படுபவராக மனுவல் வால்ஸ் மாறி உள்ளார்.

அன்றாடம் ஊடகங்களில் இவரது பெயர் அடிபட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளளது. 2012ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரான்சுவா ஒல்லோந்திற்காகக் கடுமையாக வேலை செய்து அவருடைய நம்பிக்கையை மனுவல் வால்ஸ் பெற்றிருந்தார்.

இதன் மூலம் உள்துறை அமைச்சர் பதவியை இவர் பெற்றார். முன்னாள் பிரதமரின் செல்வாக்கு மிகவும் மோசமாக மக்களிடம் சரிந்து கொண்டு செல்ல உள்துறை அமைச்சராக மனுவல் வால்ஸ் மிகவும் பிரபலமடைந்து வந்தார். இவர் மீது வதந்திகளோ எந்தக் குற்றச்சாட்டுகளோ வராது இருந்தது. இப்படியான அமைச்சர்கள் மிக அரிதாகவே உள்ளனர். இவரது தொடர்பாடற் திறனும் விடயங்களை மிக விரைவாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திறனும் இவரைப் பிரபலமாக்கியது. இது ஜோன் மார்க் ஐரோலிடம் பெரும் குறைபாடாகவே இருந்துள்ளது.

 

பிரதமர் மாளிகை மனுவல் வால்சிற்குப் புதியது அல்ல. 1997-2002 வரையான காலப்பகுதியில் லியோனல் ஜோஸ்பன் பிரதமராக இருந்த சமயத்தில் அவரின் தொடர்பாடல் பொறுப்பாளராக மனுவல் வால்ஸ் பணியாற்றி உள்ளார்.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies