சுவிசில் பெருகி வரும் அயல்நாட்டு பாலாடைக்கட்டி விற்பனை
.
சுவிசில் பெருகி வரும் அயல்நாட்டு பாலாடைக்கட்டி விற்பனையால் உள்ளூர் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சுவிசின் வியாபார சரக்கான பாலாடைக்கட்டியின் விற்பனை கடந்தாண்டில் மிகவும் குறைந்துள்ளதாக புள்ளியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் அந்நாட்டு மக்கள், சராசரியாக உள்ளுர் பாலாடைக்கட்டியை மொத்தம் 14.7 கிலோ உட்கொண்டுள்ளனர் என்றும் வெளிநாட்டு பாலாடைக்கட்டிகளை உண்பவரின் எண்ணிக்கை 6.25 கிலோ ஆக அதிகரித்து 1.6 சதவீதத்தை அடைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும் வெளிநாட்டு பாலாடைக்கட்டிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதே உள்நாட்டு பாலடைக்கட்டிகள் பின் தள்ளப்படுவதற்கான முக்கிய காரணமாகும் என தெரியவந்துள்ளது.
சாலை விதியை மீறியதில் பொருட்சோதத்தை சந்தித்த மூதாட்டி
.
சுவிசில் மூதாட்டி ஒருவர் சாலையின் போக்குவரத்து அடையாளத்தை புரக்கணித்து சென்றதால் பெரும் பொருட்சேதம் நிகழ்ந்துள்ளது.
சுவிசின் பெர்ன் மாகாணத்தில் 87 வயதுடைய மூதாட்டி நேற்று தனது (BMW) காரை ஓட்டி செல்கையில் சாலை ஒன்றை கடந்தபோது போக்குவரத்து அடையாளமான சிகப்பு விளக்கை கண்டுகொள்ளமல் சென்றுள்ளார்.
இதனால் இவரது கார் திரும்பிய பாதையில் வந்த மற்றொரு காருடன் மோதிக்கொண்டார்.இதில் உயிர்சேதம் ஏதும் நிகழவில்லை என்றபோதும் 15,000 பிராங்குகள் மதிப்பிலான பொருள் சேதத்தை சந்திக்க நேர்ந்தது.
சுவிஸ் புகழ் பாடும் சாரா பெர்க்சன்
.
இங்கிலாந்து இளவரசரின் மனைவியான சாரா பெர்க்சன் தனது உடல் எடையை குறைத்ததற்காக வெர்பியர் ரிசார்டை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
சாரா பெர்க்சன் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியாவார்.
இவர்களுக்கு 1996ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துவிட்ட போதிலும் அவர்களது இரண்டு மகள்களுடன், குடும்பமாக வருடத்திற்கு ஒரு முறை சுவிட்சர்லாந்திலுள்ள வெர்பியர் (VERBIER) என்ற பெயருடைய மலைப்பிரதேச கோடை வாசஸ்த்தலத்திற்கு வந்து, தங்கள் விடுமுறையை இனிதே கழித்துவிட்டு செல்வார்கள்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த பழக்கத்தை கொண்டிருக்கும் இவர்கள் இந்த ஆண்டும் ரிசார்ட்டில் தங்கியிருக்கையில் பெர்க்சன் சுவிஸ் ஊடகவியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், சுவிட்சர்லாந்து எனது இரண்டாவது தாயகம் என்றும் இங்குள்ள மக்கள் தன்னை மிகவும் வரவேற்று உபசரிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் நான் உலகசுகாதார கழகத்தின் தூதுவராக பணியாற்றுவதால், ஒரு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தினமும் நான்கு மணி நேரம் சுவிஸில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் இதனால் எனது உடல் எடை 20 கிலோ குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்