ரூ.20 கோடி மதிப்புள்ள ஆடை சுவிட்சர்லாந்தில் வடிவமைப்பு
21 Mar,2014

ரூ.20 கோடி மதிப்புள்ள ஆடை சுவிட்சர்லாந்தில் வடிவமைப்பு
ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர உடை, தயாரிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரத்தில் உள்ள, "சூட் ஆர்ட்' என்ற நிறுவனம், ஆடம்பர உடையை வடிவமைத்துள்ளது. "நானோ' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த உடையின் உள்பகுதியில், சிறிய குளிரூட்டும் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை, சூட்டில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள, இந்த ஆடையில், பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பட்டன்களும், சுவிஸ் வாட்ச் தயாரிக்க பயன்படுத்தப்படும், "316எல்' உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. தண்ணீரால் பாதிக்கப்படாத, இந்த ஆடையில், 440 காரட் எடையில், 880 கறுப்பு வைரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. "டைமண்ட் ஆர்மர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆடையுடன், தங்க இழைகளால் ஆன, "டை' (கழுத்துப்பட்டை) வழங்கப்படுகிறது.
"வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப, ஒரேயொரு சூட்டை தயாரித்துள்ள நிறுவனம், இதன் படத்தை இன்னும் வெளியிடவில்லை.