பயிற்சியின் போர்வையில் தமிழ்ப் பெண்கள் மீது சிங்களப் படைகள் கொடூர வதை – திடுக்கிடும் காணொளி
19 Mar,2014
பயிற்சியின் போர்வையில் தமிழ்ப் பெண்கள் மீது சிங்களப் படைகள் கொடூர வதை – திடுக்கிடும் காணொளி


சிங்கள ஆயுதப் படைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் பயிற்சியின் போர்வையில் கொடூர வதைகளுக்கு உட்படுத்தப்படும் திடுக்கிடும் காணொளி ஒன்று வெளிவந்துள்ளது.
இதில் நிலத்தில் வீழ்ந்து கிடந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும் தமிழ்ப் பெண்கள், தடிகள் கொண்டு சிங்களப் படையினரால் கொடூரமாக தாக்கப்படுகின்றனர்.
சிங்களப் படைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் பலர் படையதிகாரிகளால் தொடர்ச்சியாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் தற்பொழுது இக் காணொளி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.