பிரான்ஸ், பொபினி ஆற்றில் பொலித்தீன் பையில் தலையற்ற உடலம் மீட்பு
17 Mar,2014


பிரான்ஸ், பொபினி ஆற்றில் பொலித்தீன் பையில் தலையற்ற உடலம் மீட்பு
.
பிரான்சில் தலைநகருக்கு அண்மையில் பொபினி என்ற இடத்தில் Ourcq கால்வாயில் (canal de l’Ourcq) தலையற்ற நிலையில் அழுகிய உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப் பகுதியில் நடந்து வந்த வழிப்போக்கர் ஒருவரே முதலில் இந்த உடலத்தைக் கண்டு பிரெஞ்சுக் காவற்துறையினர்க்கு அறிவித்துள்ளார். இப்பகுதி 93வது வட்டாரத்தின் தலைமைக்காவல்துறைக்கு Bobigny Prளூfecture – Seine-Saint-Denis அருகிலேயே உள்ளது.
அதன் பின் அங்கு வந்த பிரெஞ்சுக் காவற்துறையினர் பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் தலையற்ற உடலம் ஒன்றை மீட்டனர். காவற்துறையின் ஆற்று நதிப்படையான La brigade fluviale அழைக்கப்பட்டு அவர்களே உடலத்தை வெளியே கொண்டு வந்தனர்.அந்தப் பகுதி பொதுமக்களுக்குத் தடை செய்ப்பட்டு பாதுகாப்புச் சங்கிலியால் அடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பிரெஞ்சு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என பிரெஞ்சு ஊடகம் ஒன்று தொிவித்துள்ளது.

கணவரின் நினைவு தினத்தை குடித்து கும்மாளமிட்டு கொண்டாடிய மனைவி
.
பிரான்சில் விதவை பெண் ஒருவர் தனது கணவரின் நினைவு தினத்தை, கல்லறைக்கு அருகிலேயே மது குடித்து உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
பிரான்சின் லெஸ்வேகஸ் என்ற பகுதியில் நேற்று ஜோசைன் கெளட்சன் என்ற விதவை பெண், தன் கணவரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பர்களை அழைத்து கல்லறையிற்கு அருகில் மது விருந்தளித்துள்ளார்.
அப்போது ஷாப்பைன் என்ற ஒருவித மதுவினை கண்ணாடி குவளைகளில் ஏந்தியவாறு ஜோசைன், தனது கணவரது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அக்கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கூட்டத்தை கலைந்து செல்ல கூறியதுடன், ஜோசனைக்கு 38 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளனர்.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் அபராதம் குறைவாக இருந்தபோதிலும் ஜோசானா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்றும், தன் கணவரை கெளரவிப்பதற்காக மட்டுமே வைக்கப்பட்ட இந்த மது விருந்தில் வேறு எந்த கேட்ட நோக்கமும் இல்லை எனவும் இவரது வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.