உலக தரவரிசை பட்டியலில் சுவிஸ் பல்கலைக்கழகம்
.
சுவிசின் தலைசிறந்த இரண்டு பல்கலைக்கழகம் சர்வதேச பல்கலைக்கழக பட்டியில் இடம்பிடித்துள்ளன.
உலகில் சிறப்பு வாய்ந்த பல்கலைகழகங்கள் குறித்து Times Higher Education ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த பட்டியலில் இடம்பிடித்த 60 பல்கலைகழகங்கங்களில் சூரிஜ் பல்கலைக்கழகம் 16ம் இடத்தையும், லுசென் மாகாண எக்கோல் பாலிடெக்னிக் 49 இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைகழகம் முதலிடம் பிடித்ததை தொடர்ந்து மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஸ்டான்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனின் கேம்பிரிஜ், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகங்கள் பட்டியலின் தரவரிசையில் முன்னிடங்களை வகிக்கின்றது.
இந்நிலையில் சுமார் 15,000 பேர் மற்றும் 16 பேராசியர்களை கொண்ட சூரிஜ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பயின்று டிப்ளமோ சான்றிதழை கடந்த 1901ம் ஆண்டு பெற்றது குறிப்பிடதக்கது.
மகளிர் தின கொண்டாட்டம்! வீர மங்கைகளை நினைவு கூறும் சுவிஸ்
.
சுவிசின் வரலாறுகளை ஆராய்ந்து பார்க்கையில் அக்கால பெண்கள் துணிச்சலுடன் வாழ்ந்ததாக அறியப்படுகின்றது.
சுவிசில் முந்தைய காலகட்டத்தில் பெண்கள் மிகவும் தைரியமானவர்களாக திகழ்ந்து பல போரட்டங்களை எதிர்த்து நின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களது தைரியங்களை எடுத்துக்கூறும் வகையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, இதற்கு உதாரணமாக வில்லியம் டெல் என்ற சுவிஸ் பெண் ஆஸ்திரியாவின் ஆளுநரை மீறி அவரது மகன் தலையில் ஆப்பிள் பழத்தை வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதேபோன்று, சுவிசின் வால் லுமெசியா பகுதியை கடந்த 1352ம் ஆண்டில் ஆக்கரமித்த எதிரிகளை, அப்பகுதியின் பாறையில் குண்டு வைத்து தகர்த்ததுடன், அவர்களை விரட்டியடித்தனர்.
இச்சம்பவம் Porclas என்ற பகுதியின் நுழைவு வாயிலில் இடம்பெற்றதால் இது பெண்களின் வாயில் (the Women’s Gate) என பெயரிடப்பட்டது.
இந்த (battle of Porclas) போர்காஸ் போரினை நினைவுக்கூறும் வகையில் வருடாவருடம் மூன்று நாட்கள் பெரிய விழாவாக கடந்த 1912ம் ஆண்டு வரை கொண்டாடப்பட்டு வந்துது.
ஆனால் இந்த வரலாற்று சாதனை நிகழ்ச்சிகள் பலருக்கும் நினைவில் இருப்பதில்லை என கூறப்படுகின்றது.