சுவிஸ் பெண்மணி இத்தாலியில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீயீட்டு தற்கொலை
08 Mar,2014

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இத்தாலியில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீயீட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இத்தாலியின் மொனிலா கிராமத்தில் 43 வயது நிரம்பிய திருமணமான சுவிஸ் நாட்டு பெண் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 3ம் திகதி காட்டு பகுதியிலிருக்கும் பள்ளதாக்கின் அருகில் பெட்டோரலை தன் மேல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இவரது உடலானது பியனாரோ என்னும் இடத்தில் உடல் கருகிய நிலையில் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பதை அறிய தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கலைபொருட்களை ஒப்படைக்கும் சுவிஸ்
இத்தாலிய நாட்டு தொல்லியல் பொக்கிஷங்களை திருப்பி கொடுக்க சுவிஸ் நாடு முன்வந்துள்ளது.
சுவிசில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியிலிருந்து 4500 தொல்லியல் கலைப்பொருட்கள் சுவிஸ் கொள்ளை கும்பல் ஒன்றினால் திருடப்பட்டது.
இக்கலைப் பொக்கிஷங்களை கொள்ளையடித்த நபர்கள் இதனை அமெரிக்க கலைபொருட்கள் வியாபாரிகளுக்கு கடத்தி கொடுக்க திட்டமிட்டு இருந்தனர்.
இவ்விடயத்தை அறிந்த சுவிஸ் நீதித்துறை கலைப்பொட்களை மீட்டு இத்தாலிய அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.
இதில் கடந்த 2001ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில் மட்டும் மொத்தம் 4536 பொக்கிஷங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
