
சுற்றுலா பயணிகளை எச்சரிக்கும் சுவிஸ்
சுவிஸ் நாட்டு மக்களுக்கு எகிப்தில் உள்ள ஷார்ம் எல் ஷெரிக் 'Sharm el-Sheikh' என்ற சுற்றுலா தளத்திற்கு செல்லவேண்டாமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் எகிப்தின் “ஷார்ம் எல் ஷெரிக்” என்ற சுற்றுலாத்தளம் உள்ளது.
இதில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்த ”அன்சார் பெயிட் அல் மாக்டிஸ்” என்ற குழுவினர் சமீபத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதால் மூன்று தென் கொரிய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு எகிப்திய ஜனாதிபதி ஹோசினி முபாரக்கை பதவியிலிருந்து நீக்கிவிட்டு இராணுவம் ஆட்சி புரிந்துவந்தது.
மேலும் கடந்த 2013ம் ஆண்டில் ஜனாதிபதியாய் பதவி வகித்த இஸ்லாமியரான மொகமத் மோரிஸ் என்பவரையும் பதவி விலக செய்து இரணுவ ஆட்சியின் ஆதிக்கமே நடைபெற்று வந்ததால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் தாக்குதல்களில் ஈடுப்பட்டனர்.
எனவே எகிப்து நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் ஷார்ம் எல் ஷெரிக் இடத்திற்கு சுற்றுலா செல்வதை குறைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு, சுவிஸ் நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவிசில் மாயமான காம கொடூரன்
சுவிசில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவளித்த நபர் திடீரென மாயமாகியுள்ளார்.
சுவிசின் பாசல் நகரில், எக்கர் என்ற 46 வயது மதிக்கதக்க நபர், 9 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.
இதற்கிடையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததால், பாசல் பல்கலைக்கழக மனநல சிகிச்சைமையத்தில் இரசாயன சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, லுக்ரின் (Lucrin) என்ற மருந்தை உட்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு இவர் முன்பு எக்கர் சிகிச்சை மையத்திலிருந்து தப்பியோடியதால், பாசல் பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
குடிதண்ணீரை வீணடிக்கும் சுவிஸ்
சுவிசில் அதிகமாக குடிதண்ணீர் வீணாக்கப்படுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
நவீன உள்கட்டமைப்பில் தலைசிறந்து விளங்குவதாய் மார்தட்டி கொள்ளும் சுவிஸ், குடித்தண்ணீரை அதிகளவில் வீணாக்குகின்றனது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பழுதான குழாய்களினால் 14 சதவீத குடிதண்ணீரும், நொடி ஒன்றிற்கு 4,000 லிட்டர் தண்ணீரும் வீணாக்கப்படுகின்றது.
இதுகுறித்து குடிநீர் வாரியத்தின் அதிகாரி பிலிபைன் கோலட் கூறுகையில், சிறிய குழாய்களுக்கு தண்ணீரை கொடுக்கும் ராட்சத குழாய்கள் பழமையாகி பழுதடைந்து விடுகின்றது என்றும் புதிய குழாய்களை பொருத்துவதற்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏல நிறுவனத்திற்கு திரும்பும் ”பின்க் ஸ்டார்” வைரம்
சுவிசில் ரோஜா நிற வைரத்தை விற்பனை செய்த ஏல நிறுவனம், அந்த வைரத்தை விற்றவரிடமிருந்து திரும்ப வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
சுவிசில் சோதிபை என்ற பிரபல ஏல நிறுவனம், 60 காரட் மதிப்புடைய ரோஜாப்பூ நிறம் கொண்ட வைரத்தை கடந்த 2013ம் ஆண்டு 83 மில்லியனிற்கு நபர் ஒருவருக்கு விற்பனை செய்தது.
இந்நிலையில், இதனை வாங்கிய நபர் மொத்த பணத்தையும் திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருப்பதால், இவரிடமிருந்து மீண்டும் வைரத்தை பெறுவதற்கு இந்த ஏல நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1999ம் ஆண்டில் ஆப்ரிக்காவின் வைரச்சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட 'De Beers' என்று அழைக்கப்படும் இந்த ”பின்க் ஸ்டார்” வைரம், தற்போது அந்த நபரிடம் இருந்து திரும்ப பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.