மனித மூளை ஆய்வு!
04 Mar,2014
சிக்கலில் மனித மூளை ஆய்வு! ஐரோப்பிய யூனியன் துண்டிப்பு காரணம்?
சுவிட்சர்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் மனித மூளையின் செயல்பாடு குறித்த ஆய்வு சிக்கலை சந்தித்துள்ளது.
சுவிஸ் நாடானது ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து வரும் எண்ணிக்கையை கட்டுப்பத்தும் சட்டத்தினை கொண்டுவந்ததன் விளைவாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
அதாவது சுவிஸின் ஜெனிவாவில், மனித மூளையின் செயல்பாடு மற்றும் செயல்கள் குறித்த ஆராய்ச்சியானது நடைபெற்று வருகிறது.
இதில், மனிதனாகப் பிறந்தவனுக்கு என்ன காரணத்தினால் மூளையில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன, மேலும் இதன் ஞாபகமறதிகள் குறித்த நோய்கள் தொடர்பாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 500 பேர்களில் பிற நாடுகளிலிருந்து 22 பேர் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் பிரச்சனையால் இந்த ஆய்வினை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதற்கு வழங்கப்படும் நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையில் சுவிஸ்
ஐரோப்பிய ஒன்றியம் தனது புதிய உடன் படிக்கையில் சுவிட்சர்லாந்தை இணைக்க தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கடந்த சுவிட்சர்லாந்தில் கடந்த 9ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து குடிபுகுவோருக்கு தடை விதித்துள்ளது.
இதுபோன்ற குடிபுகுவோர் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதற்காக, கடந்த 2011ம் ஆண்டு ஐரோப்பிய புகலிட ஆதரவு அலுவலகம் உருவாக்கப்பட்டது.
தற்போது சுவிசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்திற்கு ஐரோப்பிய கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
இதில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடிபுகுவோர் தொடர்பான ஆபத்துகளை சரிசெய்ய உதவுவதே சுவிசின் பங்களிப்பாகும்.