சுவிஸ் விபச்சார விடுதி ஒன்றில் நபர் மரணம்.
14 Feb,2014
சுவிஸ் விபச்சார விடுதி ஒன்றில் 40 வயது நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
சுவிசின் டிகினோ நகரில் இருக்கும் “69 கபே” என்ற விபச்சார விடுதி இத்தாலிய வாடிக்கையாளர்களுக்காக தொடங்கப்பட்டதாகும்.
மொத்தம் 25 விலைமாதுக்கள் வேலை செய்யும் இவ்விடுதி, இத்தாலி நாட்டிற்கு வெகு அருகாமையில் இருப்பதால் இப்பகுதிகளில் பெரும்பாலும் இத்தாலிய மொழியே பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 8ம் திகதி இங்கிருக்கும் விலைமாது ஒருவருடன் 40வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்கியுள்ளார்.
அப்போது திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார், இவரது மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றும் இது இயற்கையான மரணம் தான் எனவும் கூறியுள்ளனர்.
இதேபோல் கடந்த 2010ம் ஆண்டு பெல்லின் சோனா பகுதியில் விலைமாதுவின் அறையிலேயே ஒருவர் அகால மரணமுற்றது குறிப்பிடத்தக்கது.