ஆண்மை விருத்திக்கு எருமை பால் குடியுங்கள்! – சொல்கிறார் ஜெகநாதன்!
முல்லைத்தீவு குமுளமுனை பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில் முதன்மை விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, வடமாகாணசபை உறுப்பினரும், வடமாகாணசபையின் உப அவைத்தலைவருமாகிய அன்ரனி ஜெகநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “வளங்கல்களில பால் பழம் முக்கியமான வளம். இந்த பால் குடிக்கிறதால மனுசனுக்கு ஆணவமும் ஏற்படும். இந்த ஆணவத்தில ஒழுங்கான குழந்தைகள் பிறக்கும். குடும்ப நலன்களும் சரியான முறையில போகும்.” என்று தெரிவித்தார்.
இடம், பொருள், ஏவல் காலமறியாத ஜெகநாதனின் இந்த அநாகரிக பேச்சால், பாடசாலையின் விளையாட்டு நிகழ்ச்சியில் ஒருவித சலசலப்பு ஏற்பட்டதுடன், நிகழ்ச்சியில் குடும்பத்தினர் சகிதம் கலந்து கொண்டிருந்த தம்பதிகளும், பெற்றோர்களும், பெண்களும், பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும், விருந்தினர்களும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு, தலையை தரையை நோக்கி தொங்கப்போட்டுக்கொண்டனர்.
கல்விச்சமுகமும், வளர் இளம்பராய பாடசாலை பிள்ளைகளும் ஒன்று கூடிய குறித்த நிகழ்ச்சியில் முகம் சுழிக்க வைத்த ஜெகநாதனின் பேச்சை கேட்ட முதியவர் ஒருவர், “இவரென்ன மாகாணசபை உறுப்பினரா? இல்லை குடும்ப நல உத்தியோகத்தரா?” என்று சினந்ததையும் அவதானிக்க முடிந்தது.
வாக்களித்த மக்களை மறந்து விட்டு, அன்ரனி ஜெகநாதன் முல்லைத்தீவு மாவட்டத்தில் செய்யும் ஏய்த்துப்புழைப்புகள், ஏறி மிதிப்புகள், ஊழல்கள், முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகம், அரச வளப்பயன்பாட்டு துஸ்பிரயோகம், ஏதேச்சதிகாரம் இவற்றை சுட்டிக்காட்டி, உடனடியாகவே இவரின் அடாத்து அரசியலை முடிவுக்கு கொண்டு வருமாறு, “முல்லை மக்கள் சேவையாளர்கள்” வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு கடந்த 07.02.2014 என திகதியிடப்பட்டு அனுப்பி வைத்துள்ளோம்.
வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-