நூலகத்தை கொளுத்திய இளம் பெண்கள் சிறையிலடைப்பு
சுவிட்சர்லாந்தில் மத்திய நூலகத்தை தீயிட்டு கொழுத்திய இரு பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜனவரி 20ம் திகதி லுசேன் நகரத்தில் உள்ள பொது நூலகம் ஒன்றில் 20 வயது பெண் ஒருவரும் 22 வயதுடைய பெண்ணும் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது நூலகத்தின் பாதுகாப்பு பெட்டகத்தை பலமுறை திறக்க முயன்றும் இயலாததால் கோபமுற்று காகிதம் மற்றும் எழுது பொருள் வைக்கப்பட்டிருந்த அறையை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இத்தீவிபத்தில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சாம்பலாகின மற்றும் 1.5 மில்லியன் பிராங்குகள் சேதமடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், இவர்களது வருகையானது நூலகத்தில் இருந்த காணொளி கமெராவில் பதிவாகியுள்ளது, இதன் உதவியால் அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கில் கைதான 20 வயது பெண் முன்பே திருட்டுவழக்குகளில் சம்பந்தப்பட்ட நபராக பொலிசாரால் கருதப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொது சொத்தை அழித்த குற்றத்திற்காக அவருக்கு 3 வருட சிறைதண்டனையும், அவருடன் வந்த பெண் திருடருக்கு 2 வருட சிறைதண்டனையும் வழங்கி குற்றவியில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெரும் அவதியில் பழைய ஜோடி
சுவிஸ் நாட்டில் முதியவர் ஒருவருக்கு துப்பாக்கி சூடு நடத்திய வழக்கில் 10 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் ஜெனிவா நகரத்தில் 80 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
இவர் வசிக்கும் குடியிருப்பிற்கு வெளியே எதிர்புறத்திலிருக்கும் இரவு விடுதியில், வாரத்தின் ஏழு நாட்களிலும் ஓசையுடன் கூடிய இசையும் “டிஸ்கோதே” நடனமும் நடந்து வந்துள்ளது.
தனது மனைவி நோயுற்று இருப்பதால் தாங்கள் இச்சத்தால் பெரும் அவதிக்குள்ளாவதாக பலமுறை விடுதியை சேர்ந்தவர்களிடம் முதியவர் எடுத்துரைத்துள்ளார்.
ஆனால் இதை செவி கொடுத்து கேளாத விடுதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதியவரின் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முதியவர் விடுதியினர் மீது தாறுமாறாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் விடுதியை சேர்ந்த ஒருவரது வயிற்றில் குண்டு பாய்ந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து முதியவரின் மீது தொடரப்பட்ட வழக்கில் 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது முதியவரின் சார்பில் வாதாடிய ஜெனிவாவின் தலைமை வழக்கறிஞர், முதியவரின் தண்டனை காலம் குறைக்கப்பட வேண்டும் என்றும் முதியவரின் வேண்கோளை விடுதியினர் பெருட்படுத்தவில்லை, பொலிசாரும் பெரிதாக எடுத்துகொள்ளாததால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளார்.
இருந்த போதிலும் முதியவரின் தண்டனை காலம் குறைக்கப்படவில்லை.
சுவிஸ்ன் மனிதநேயம்
சுவிட்சர்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக வாழ்ந்து வந்த பெண் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈகுவேடார் நாட்டை சேர்ந்த நெல்லி வெலன்சியா என்பவர் தன் நாட்டில் பொருளாதார சரிவு மற்றும் சமூக நெருக்கடியின் காராணமாக வேலை ஏதும் கிடைக்காமல் போனதால் தனது மூன்று ஆண் குழந்தைகளுடன் கடந்த 1999ம் ஆண்டு சுவிஸ் நாட்டிற்று குடிபெயர்ந்துள்ளார்.
தன் குழந்தைகளை ஈகுவேடாரின் தலைநகரம் குய்டோ மாகாணத்தில் இருக்கும் வளர்ப்பு குடும்பத்தினர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு சுவிஸில் வீட்டு வேலைகள் செய்து பிழைப்பு நடத்திவந்தார்.
இந்நிலையில், இவரது குழந்தைகளை, அந்த குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக வந்த செவி வழி செய்தியை அறிந்த அவர் பதட்டத்துடன் விரைவாக குய்டோவிற்கு சென்று குழந்தைகளை அவர்களிடமிருந்து மீட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2003ம் ஆண்டு இவர் சட்டத்திற்கு புறம்பாக பணிபுரிகிறார் என பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
மேலும் இவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இவர் தன் மீது தொடரப்பட்ட வழக்கை மேல் முறையீடு செய்தார். இதனையடுத்து மத்திய நிர்வாக நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு இடம்பெயர்தல் பற்றி மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.
இறுதியில் மனிதாபிமான அடிப்படையில் இவர் சுவிசில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்துள்ள உணவுகளை வழங்கும் சுவிஸ்: உலகளவில் 2வது இடம்
உலகளவில் சுவிஸ் நாடனாது சமையற்கலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஓக்ஸ்பாம் என்ற சர்வதேச அமைப்பு சத்துள்ள ஆரோக்கியமான உணவுகள் சமைக்கப்படும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் நெதர்லாந்து தனது பாலாடைக்கட்டி தயாரிப்பில் சிறப்பாய் விளங்குவதால் சுவிஸை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனைதொடர்ந்து ஒக்ஸ்பாம் சர்வதேச அமைப்பின் சமையற்கலையில் சிறப்புமிக்க முதல் 20 நாடுகள் என்ற பட்டியலில் பிற ஐரோப்பிய நாடுகள் இடம்பிடித்து இருந்தன.
ஆனால் ஐரோப்பிய நாடுகளின் கூட்டாக இல்லாத அவுஸ்திரேலியா நாடு 8வது இடத்தை பிடித்தது.
மேலும் அமெரிக்கா, ஜப்பான், நியூசிலாந்து, பிரேசில் மற்றும் கனடா ஆகிய நாடுகள் எவையும் இவ்வுணவு அட்டவணையில் இடம்பெறவில்லை.
இணையதள தேர்வில் அவதிக்குள்ளான சூரிச் பல்கலைக்கழகம்
சுவிஸின் சூரிச் பல்கலைகழகத்தில் இணையதள தேர்வை எழுத வந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இணையதளத்தில் சர்வர்(Server)பிரச்சனை நேர்ந்ததால் தேர்வு எழுத முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கடந்த 13ம் திகதி சூரிச் பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ”Introduction to Law” என்ற பாடத் தேர்வை எழுத சென்றுள்ளனர்.
இத்தேர்வு தொடங்கிய 11 நிமிடங்களிலேயே இணையதள சர்வர் (Server) பிரச்சினை நேர்ந்தது இணையதளமும் மிக மெதுவாக செயல்பட தொடங்கியது.
இதனால் மாணவர்கள் தேர்வை மேற்கொள்ள இயலாமல் பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளனர்.
எனினும் இதுவரை தேர்வு எழுத இயலாமல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது துல்லியமாக தெரியவில்லை என Neue Zற்rcher Zeitung (NZZ) என்ற செய்தித்தாள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் மறுதேர்வு பற்றி கலந்துரையாடியதில் வரும் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடத்தப்படும் என பல்கலைகழக அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதுகுறித்து பல்கலைகழக அதிகாரிகள் கூறுகையில், மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 780 என்றும் இவர்களுக்கு தேர்வில் 90 நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டு, மாறுபட்ட கேள்விகள் வேவ்வேறு வரிசையில் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் முன்பு சரியாக தேர்விற்கு தன்னை தயார் படுத்திகொள்ளாத மாணவர்கள் இச்சந்தர்பத்தை நன்கு பயன்படுத்திகொள்ளலாம் என பல்கலைகழக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெனிவா ஏரியில் ஓர் ரஷ்ய கிராமம்
சுவிசின் ஜெனிவா ஏரி பகுதியில் உள்ள மான்ட்ரியக்ஸ் நகரம் ரஷ்யர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதற்கு இங்கு காணப்படும் சூழ்நிலை, வாழும் முறை ஆகியவையே காரணமாகும்.
இங்கு வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கையில் 49 சதவிகிதம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர், இதில் 800 பேர் ரஷ்யர்கள் என மேயர் லாவுரெண்ட வெஹிரில் தெரிவித்துள்ளார்.
இங்கு சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடிமக்களால் அழகுநிலையம், உடற்பயிற்சி கூடம், நகைக்கடை உட்பட பல நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து பல ஆண்டுகளாக மான்ட்ரியக்ஸில் வாழ்ந்து வரும் யூலியா ஜிகான் எகோர்வா கூறுகையில், இவ்விடம் ரஷ்ய பார்வையாளர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஓர் இடமாகும்.
இங்கு பிரபலமான நூலாசிரியர், எழுத்தாளர் போன்ற பல பிரபலங்கள் வாழ்ந்து வந்தனர் என்று தெரிவித்துள்ளார்.