சுவிஸ் நிறுவனத்தின் மீது பாயும் ஜப்பான்

09 Jan,2014
 


 

 

சுவிஸ் மருந்து நிறுவனத்தின் மீது பாயும் ஜப்பான்


.


சுவிசின் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனத்தின் மீது ஜப்பான் சுகாதார அமைச்சகம் குற்றவியல் புகாரை கொடுத்துள்ளது.

சுவிசில் இருக்கும் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனம் இரத்த அழுத்ததிற்காக அறிமுகம் செய்த புதிய மாத்திரையை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி மிகைப்படுத்த விளம்பரங்களை அளித்திருக்கிறது.

மேலும் ஜப்பான் நாட்டிலும் “டயோவின்” மருந்தானது விற்கப்படுகிறது, இது தவிர 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெறப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மருந்தானது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் “இந்த மருந்தை உட்கொள்பவருக்கு மார்புவலி மற்றும் பக்கவாதம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்றும் பொதுவாக இந்த மருந்தானது எல்லா நோயாளிகளுக்கும் உகந்தது அல்ல எனவும் கூறியுள்ளனர்.

நோவார்டிஸ் மருந்துபொருட்கள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி “டேவிட் எப்ஸ்டின்” இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் சட்டத்தின்படி, எவர் ஒருவர் மிகைப்படுத்தபட்ட விளம்பரத்தின் கீழ் குற்றவாளியாக தீர்க்கப்படுகிறாரோ அவருக்கு 2 வருடம் சிறைவாசமோ அல்லது இரண்டு மில்லியன் அபராதமோ கட்ட வேண்டும்.

எனினும் இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

 

சுவிசின் ஆல்ப்சில் கடும் பனிச்சரிவு: 4 பேர் பலி
.


சுவிசின் வாலெய்ஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சுவிஸ் மலைப்பகுதியின் சில இடங்களில் பனிப்பொழிவு மிக மோசமாக உள்ளது. வாலெய்ஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு பேர் சிக்கி கொண்டனர்.

உடனே இவர்களை காப்பாற்ற ஐந்து ஹெலிகாப்டர் விமானங்கள், 26 பேர் கொண்ட உதவிக்குழு மற்றும் ஆறு மருந்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நால்வரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், இதில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வாலெய்ஸ் மண்டல பொலிசார் கூறுகையில், கடந்த ஜனவரி 5ம் திகதி சரியாக மதியம் 2.40 மணியளவில் 2400 மீற்றர் உயரத்தில் இந்த பனிச்சறுக்கு நேர்ந்துள்ளது என்றும் இதில் மலையேரும் வழிகாட்டி ஒருவர், இரண்டு மலையேறும் பனிச்சருக்காளர்கள் இறந்துள்ளனர், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கடந்த ஜனவரி 4ம் திகதியும் 34 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் வாயூத் மண்டலத்தின் நென்டாஸ் பனிச்சருக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் மரணமடைந்தாக பொலிசார் கூறியுள்ளனர்.

வாலெய்ஸ் மண்டலத்தில் தொடர்ந்து பனிச்சரிவுகள் நேர்ந்ததால் இப்பகுதி முழுவதும் அபாயம் நிறைந்த சூழலில் உள்ளது என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

பிட்ஸ்பின்“ நிறுவனத்தின் பயன்பாட்டை கைப்பற்றிய கூகிள் நிறுவனம்
.


பிட்ஸ்பின் நிறுவனத்தின் ”ஆண்ட்ராய்டு அலார கடிகாரம்” பயன்பாட்டை கூகிள் நிறுவனம் வாங்கியுள்ளது. “பிட்ஸ்பின்” நிறுவனம் சுவிசில் உள்ள சூரிஜ் நகரை மையமாக கொண்டு கணனி அறிவியலில் திறமைவாய்ந்த வல்லுநர்களால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் பயன்படுத்தி வந்த ”டைம்லி” என்ற ”ஆண்ட்ராய்டு அலார கடிகாரம்” ஸ்மாட்போன் பயன்பாடு ஆண்ட்ராய்டு கைப்பேசிகளிலும், டேப்லட்டுகளிலும் பயன்படுத்தபட்டதாகும்.
தற்போது கூகிள் நிறுவனம் இதை வாங்கியுள்ளதால் இதன் பயன்பாட்டை “கூகிள் பிளே” என்ற பயன்பாட்டின் மூலம் இலவசமாக பெறலாம்.

பிட்ஸ்பின் நிறுவனத்தின் இந்த “டைம்லி”பயன்பாடு அலாரமாக மட்டுமில்லாமல் ஸ்டாப் கடிகாரமாகவும் பயன்படுத்தப்படும் அழகிய கலவையை கொண்டதாகும்.

மேலும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பயன்பாடு வெளியிடப்பட்டது. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இப்பயன்பாடு ”கூகிள் பிளே ஸ்டோரின் மூலம் ஐந்து லட்சம் வாடிக்கையாளர்கள் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது பாராட்டபட வேண்டிய ஒன்றாகும்.

 

பனிச்சரிவால் பலியான மலைவழிக்காட்டி
.


சுவிஸின் ஆல்ப்ஸ் மலை பகுதியில் மலையேருபவர்களை வழிநடத்தும் அனுபவமிக்க மலை வழிக்காட்டி ஒருவர் பனிச்சருக்கால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாகவே ஆல்ப்ஸ் மலையில் மோசமான வானிலையின் காரணத்தால் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவங்கள் பலரின் உயிரை காவு எடுத்துள்ளது. இச்சம்பங்களில் ஒன்றானது மலைவழிக்காட்டி சாமூவேல் மாத்தே என்பவரின் இறப்பு. 26 வயது நிரம்பிய சாமூவேல் மலையேருவதில் மிகுந்த திறமைவாய்ந்த அனுபவசாலி.

இவர் கடந்த 5ம் திகதி ஆறு பேர் கொண்ட குழுவை 2400 மீற்றர் உயரத்திலுள்ள பனிமலையில் வழிநடத்தி கொண்டு செல்கையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு இவருடன் சேர்ந்து மூன்று பேரை அடித்து சென்றது.உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் சாம்வேலும் ,இவருடன் வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

சுவிசில் ‘குவா குவா’ குட்டிகளுக்கு அதிகரிக்கும் பெட்டிகள்
.


சுவிசில் ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குழந்தைகளின் பெட்டிகள் உயர்ந்துள்ளது.
சுவிஸில் குழந்தைகளை கைவிடுவது என்பது சர்ச்சைக்குரிய ஒரு விடயமாய் இருப்பினும் பாதுகாப்பற்ற குழந்தைகளுக்காக வசதிகள் செய்யப்பட்டு அவர்கள் காக்கப்படுகின்றனர்.

கடந்த 2012 ம் ஆண்டு இந்த குழந்தை பெட்டி முயற்சி “சுவிஸின் தாய்சேய் உதவி” என்ற அமைப்பினால் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு கருக்கலப்பினை எதிர்த்து பெண்களுக்கும், குடும்பங்களுக்கும் ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி கர்ப்பகாலத்திலும் குழந்தை பிறப்பின் போதும் எல்லாவித ஆதரவுகளையும் அளித்து உதவி புரியும் அமைப்பு ஆகும்.

இதற்கு ஒரு புறம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கைவிடப்படப்பட்ட குழந்தைகளின் அடையாளங்கள் ,பெற்றோரின் தகவல்கள் போன்றவை அழிந்துவிடுகின்றன என தெரிவித்துள்ளனர்.

“குழந்தை விண்டோஸ்” என அழைக்கப்படும் குழந்தை பெட்டிகள் மருத்துவ அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் சுவிஸில் இதன் எண்ணிக்கை அதிகரித்துதான் உள்ளது. இந்த தாய்சேய் உதவி அமைப்பு டிசினேவிலும், வானெல்ஸ் பகுதி மற்றும் சூரிஜ் மாகாணத்திலும் திறக்கப்பட உள்ளன.



Share this:

india

india

danmark

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies