உருண்டு பிரண்டு கதறும் காட்சிகள் காண்போரை கலங்கவைக்கும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணின் காணொளி
23 Dec,2018
தன் குடும்ப கஷ்டத்தை வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்தால் சமாளித்து விடலாம், தன் குடும்பத்தை முன்னேற்றி விடலாம் என்ற ஆசையில் குடும்ப பெண்கள் தன் கணவன் குழந்தைகளை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்வது தற்போது அதிகரித்து வருகின்றது.
அப்படி சொல்லும் பெண்கள் பணத்தை சம்பாதிப்பதற்கு பதிலாக என்னை விட்டால் போது நான் ஊருக்கே சென்று விடுகின்றேன் என்ற அளவிற்கு ஏமாற்றப்பட்டு துன்பங்களை சம்பாதிக்கும் நிலை ஏற்படுகின்றது.
எத்தனை செய்திகள் எத்தனை காணொளிகள் இது தொடர்பாக வெளிவந்தாலும் எதையும் விசாரிக்காமல் எந்த ஆய்வு செய்யாமல் எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல் வெறுமென ஏஜெண்டுகளில் பேச்சுக்களை நம்பி பல அப்பாவி பெண்கள் வெளிநாட்டிற்கு சென்று சிக்கலில் மாட்டி வருகின்றனர்.
ஒரு சிலர் படும் கஷ்டம் வெளிச்சத்திற்கு வந்து அவர்கள் மீட்கப்படுகின்றனர். ஆனால் எந்த அறிவும் இல்லாத பலரின் நிலை என்னவென்பது தெரியாமல் போய் விடுகின்றது.
இப்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சிக்கியுள்ள இலங்கயை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
வீட்டு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டதாகவும் , ஏஜெண்ட் அடைத்து வைத்து அவரின் ஊரிக்கு அனுப்பாமல் இருப்பதாகவும் காணொளியை பதிவு செய்தவர், அந்த ஏஜெண்ட்டின் தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்துள்ளார்.
காணொளியில் அந்த பெண் உருண்டு பிரண்டு கதறும் காட்சிகள் காண்போரை கலங்க வைக்கின்றது.
தனது நிலையை எண்ணி அந்த பெண்ணிற்கு சரியாக பேசக் கூட முடியவில்லை. தன் குழந்தைகளை எப்படி ஸ்கூலுக்கு போவாங்க என கதறுகின்றார் அந்த பெண்.
அஹ்மத் என்ற நபர் ஆரம்பத்தில் இந்த பெண்ணை காப்பாற்றுமாறு இந்த காணொளியை பதிவு செய்துள்ளார் பின்னர் ஹசன் என்ற நபர் அதை மீ்ண்டும பதிவு செய்துள்ளார்.
இதில் ஹசன் என்ற நபரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
00966594145609