தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்
19 Dec,2018
: சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடக்கானலைச் சேர்ந்த பகுதியைச் சேர்ந்த ஏழைத்தாயின் மகள் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு அண்ணன் முறையுள்ள ஒரு இளைஞர் இவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கர்ப்பமாக்கி விட்டார்.இதனையடுத்து சிறுமிக்கு வயிற்று வலி எடுக்கவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் சிறுமியின் படிப்பை கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க வேண்டும் என அவரது தாய் மதுரைக் கிளையை அணுகிறார்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் வயிற்றில் 24 வாரக் கரு இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.
இதனையடுத்து கருவை கலைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நான்கு வாரத்துக்குள் இந்தத் தொகை சிறுமிக்கு வழங்க வேண்டும் உத்தரவிட்டார்.