300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார்
18 Dec,2018
பிரேசிலியா : பிரேசிலில் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் கோர்ட்டில் சரணடைந்தார்.
பிரேசிலில் ஜவாகோ டிக்சிரா டி பரியா என்பவர் பாதிரியாராகவும், மனநல மருத்துவராகவும் உள்ளார். ஆன்மீக முறையில் மன நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்த அவர், 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பிரேசில் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் கோர்ட்டில் சரணடைந்தார்.