கோபி பராத்தா!
13 Dec,2018
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 1/2 கப்
காலிபிளவர் பொடியாக நறுக்கியது - 2 கப்
நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - 1 டீ ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
தண்ணீர், சிறிது நெய் சேர்த்து, கோதுமை மாவை, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
காலிபிளவர், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இவற்றை நெய் விட்டு, லேசாக வதக்கிக் கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கவும்.
இப்போது, கோதுமை உருண்டைகளை வட்ட வடிவ பந்தாக்கி, அதன் நடுவில் குழி செய்து, அதனுள், வதக்கிய காலிபிளவர் கலவையை சிறிது வைத்து, ஓரங்களை நன்றாக மூடி விடவும்.
இந்த உருண்டையை, சப்பாத்திக் கல்லில் வைத்து, மெதுவாக வட்ட வடிவில் தேய்த்து, சூடான வாணலியில், சிறிது நெய் விட்டு, இரண்டு பக்கமும் சிவக்க சுட்டு எடுக்கவும். சூடாக சாப்பிட சுவையான டிபன்.