விழிகளும் சுமை தான்
10 Dec,2018
விழிகளும் சுமை தான்
மனதிற்கு பிடித்தவர்களை
காண முடியாத போதுஸ.!
நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா
சிரித்த ஒரே ஒரு நாள்
உன் பிறந்த நாள்ஸ..!
பொய்யான உறவுகளுக்கு முன்னால்
புன்னகையும் ஒரு பொய் தான்ஸ!
உண்மையான உறவுகளுக்கு முன்னால்
கோபம் கூட புன்னகை தான்ஸ.!
இமை மூடும் நேரத்தில்
இதயம் சொல்லும்ஸ
நீ உறங்கு!
நான் உறங்காமல்
உனக்காக துடிக்கிறேன் என்றுஸ..!
நான் திரும்பாத
பயணம் என மரணம்ஸ
அது வரை
நான் விரும்பாத
பயணம் உன் பிரிவுஸஸ
தனிமையில் அழுவது கூட வலிக்கவில்லை எனக்கு,
ஆனால் வலிக்குதடி பிறர் முன் சிரிப்பது போல் நான் நடிப்பதுஸஸ..!
யாருக்காக சிரித்தாயோ
அவர்களை நீ மறந்து விடலாம்ஸ
ஆனால், யாருக்காக அழுதாயோ
அவர்களை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாதுஸ..
ஆயிரம் பேர் அருகிலிருந்தும்
எனக்கான உலகத்தில்
என்னை மட்டும்
தனிமையை உணரச்செய்கிறது
உன் பிரிவு ஸ!
தூங்காத இமைகளுக்குள்
உறங்கும் என் விழிகள்
சுமந்திருப்பது உன்
நினைவுகளை ஸஸ.
நீ நடந்துபோக பாதை இல்லையே
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதைஸஸஸ
நொடிக்கு நூறு முறை
உன்னை நினைத்தேன்
ஒருமுறையாவது
நீ என்னை நினைப்பாயா என்றுஸ
இதுவரை
இதயம் மறக்காதது..
நெஞ்சிக்குள் உன்னை மட்டும்தான்ஸ.
உனது
வருகைக்காக..
காத்திருக்கிறேன் நான்..
தனிமையின் சிறையில் ஸ.!
பிரிவுகள் நிரந்தரமல்லஸ
இமைகளில் பிறந்த உறவுகள்
இதயத்தில் இருக்கும்வரைஸ..!
என் இதயத்திற்கு பேச மட்டும் தெரிந்தால்
சொல்லி விடும்
உன்னை சுமப்பதனால் எவ்வளவு வலி என்றுஸ.
கனவுகள் ஆயிரம் இருந்தாலும்
நினைவுகள் ஒன்றை மட்டும் நேசிப்பதே
நிஜமான வாழ்க்கை..!