சைவத்திலும் அசைவத்திலும் சேராத இந்த முட்டைக்கென்று தனித்துவம் உள்ளது. இதனை விரும்பி சாப்பிடுபவர்களை “Eggetarian” என்று அழைப்பர். ஏன் தினமும் 2 முட்டை சாப்பிட வேண்டும் என்கிற கேள்விக்கு பதில், இதில் இருக்க கூடிய அளவற்ற ஊட்டச்சத்துக்கள் தான். அவை,
வைட்டமின் எ
கால்சியம்
மெக்னீசியம் பாஸ்பரஸ்
கொலஸ்ட்ரால்
வைட்டமின் டி
சோடியம் போன்றவைகள் தான்.
தினமும் 2 முட்டையா..?
பலர் இதை தவறான கண்ணோட்டத்தில் பார்த்திருப்பர். தினமும் 2 முட்டை சாப்பிட்டால் பல மாற்றங்கள் உடலில் ஏற்படும். புரதசத்து மிக எளிமையாக இதில் கிடைப்பதால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வேக வைத்த ஒரு முட்டையில் 85 கலோரிகளும், 7 கிராம் புரதமும் உள்ளன.
மூளை வளர்ச்சிக்கு
முட்டையின் மஞ்சள் கருவில் choline என்கிற அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஞாபக சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின் படி முட்டையை சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் பலமடங்கு உயர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தினமும் 2 முட்டை சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
தாம்பத்தியத்தின் பயனை பெற
இல்லற வாழ்வின் முழு பயனையும் பெற இந்த முட்டை சிறந்த மருந்தாக வேலை செய்கிறது. இவற்றில் உள்ள வைட்டமின் பி செக்ஸ் ஹார்மோன்களை உற்பத்தி செய்து, கருவளத்தை அதிகரிக்கிறது. இதனால் பெண்கள் எளிதில் கருத்தரிக்க முட்டை உதவுகிறது.
கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற
உங்களின் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க பெரிதாக எதையும் செய்ய வேண்டாம். மாறாக தினமுமே 2 முட்டையை சாப்பிட்டு வந்தாலே போதுமாம். அத்துடன், இவற்றில் உள்ள Biotin மற்றும் vitamin B12 முடியை வலிமையாக வைத்து கொள்ளும். இதனால் முடி உதிர்வு பிரச்சினை உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது.
எலும்புகளுக்கு பலம்
வைட்டமின் டி முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே, இவை எலும்புகளுக்கு வலிமையை தரவல்லது. அதாவது, கால்சியமை எலும்புகளுக்கு அதிகமாக எடுத்து கொடுக்க வைட்டமின் டி உதவுகிறதாம். இதனால் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்.
புற்றுநோயை தடுக்கும்
முட்டையில் உள்ள Choline என்கிற அமினோ அமிலம் புற்றுநோய் வராமல் தடுக்கிறதாம். குறிப்பாக பெண்கள் தினமும் 2 முட்டை சாப்பிட்டு வந்தால் இவர்களுக்கு பெரிதும் வருகின்ற மார்பக புற்றுநோயிர்க்கான வாய்ப்பு 18% வரை குறைக்கப்படுகிறதாம்.
2 முட்டையும் – உடல் எடையும்..!
தினமும் 2 முட்டை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக காலை உணவில் இதனை சேர்த்து கொண்டால் மிக விரைவிலே உடல் எடை பிரச்சினை தீர்ந்து விடும்.
இதய பாதுகாப்பிற்கு
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த் முட்டையில் இருப்பதால் இதய பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கிறது. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு முட்டையில் உள்ள செலினியம் அதிக ஆற்றலை தருவதாக ஆய்வறிக்கைகள் சொல்கிறது.
பார்வை திறனை அதிகரிக்க
முட்டையில் லுடீன் என்கிற மூல பொருள் நிறைந்துள்ளதால் கண்களுக்கு அதிக வலிமையை தருகிறது. குறிப்பாக தினமும் 2 முட்டை சாப்பிடுவதால் கண் பார்வை அதிக கூர்மையாகவும், தெளிவாகவும் இருக்கும். மேலும், சூரிய கதிர்களில் இருந்து இவை நம்மை காக்கவும் செய்கிறது.
என்றும் இளமைக்கு
நீண்ட நாட்கள் இளமையாக இருக்க எந்த வித வேதி பொருட்களும் சேர்க்காத முறை இந்த முட்டை முறை தான். இது வேறொன்றும் இல்லை. தினமும் 2 முட்டை சாப்பிட்டு வந்தால் முகத்தின் சுருக்கங்கள் மறைய தொடங்குமாம். அத்துடன், வயதாவை இது தள்ளி போடுகிறதாம்.