ஸ்டுடியோவிற்குள் உல்லாசமாக இருப்போம்: தொழிலதிபர் பகீர் வாக்குமூலம்
02 Dec,2018
கன்னியாகுமரியில் கள்ளக்காதல் விபரீதத்தில் கள்ளக்காதலன் கள்ளக்காதலியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் சேக்கல் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ்குமார் என்பவர் குலசேகரம் அருகே ஒரு செல்போன் கடையும் ஒரு ஸ்டுடியோவையும் நடந்த்தி வருகிறார். இவரது கடைக்கு பக்கத்தில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தவர் தான் லில்லிபாய்.
லில்லிபாய் தனது மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய ராஜேஷ் குமார் கடைக்கு அவ்வப்போது செல்வார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ராஜேஷ்குமார் நடத்தி வந்த ஸ்டுடியோவில் அவ்வப்போது உல்லாசமாக இருப்பர்.
இந்நிலையில் ராஜேஷ்குமார் தொழிலை விரிவுபடுத்த, லில்லிபாயிடம் அவ்வப்போது பணம் வாங்கியுள்ளார். சமீபத்தில் தனது பணத்தை திரும்ப தரும்படி லில்லிபாய் ராஜேஷ்குமாரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், லில்லிபாய்க்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை கால்வாயில் வீசிச்சென்றார்.
இதற்கிடையே இந்த கொலை குறித்து விசாரித்து வந்த போலீஸார், குற்றவாளி ராஜேஷ்குமாரை கைது செய்து மேற்கூறியுள்ள வாக்குமூலத்தை அவனிடமிருந்து பெற்றுள்ளனர். தற்பொழுது கைது செய்துள்ளனர். தவறான உறவால் ஒரு உயிர் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.