பயிற்சி பெற வந்த 37 சிறுமிகளை சீரழித்த மாஸ்டர்
21 Nov,2018
நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வந்த 37 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இக்காலக்கட்டத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசின் கடுமையான நடவடிக்கை இல்லாததாலேயே இந்த சம்பவங்கள் அதிகரிக்கக் காரணம் என கூறப்படுகிறது.
ஜெர்மனியில் 34 வயது மதிக்கத்தக்க ஒருவன் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வந்தான். இவனிடம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயிற்சி பெற்று வந்தனர்.
இந்த அயோக்கியன் அங்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமைகள் செய்து வந்துள்ளான். இதே போல் கடந்த 2 ஆண்டுகளில் 37 சிறுமிகளை சீரழித்துள்ளான் இந்த மிருகம். இதனை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என்றி சிறுமிகளை மிரட்டியுள்ளான்.
இந்நிலையில சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் நடந்த அவலங்களை கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் அந்த அயோக்கியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.