மற்றவர்கள் மனதில் இருக்கும் இரகசியத்தை அறிய உதவும் எளிய தந்திரங்கள்
18 Nov,2018
நாம் சார்ந்துள்ள உலகம் அறிவியல் வளர்ச்சியிலும், நாகரிகத்திலும் நாளுக்குநாள் முன்னேறி கொண்டே இருக்கிறது. உணவு முதல் மருத்துவம் வரை நமது வாழ்வை எளிமையாக்க பல கருவிகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய முயற்சிகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பலநூறு ஆண்டுகளாக முயன்றும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறியும் வித்தையைதான்.
உளவியல்ரீதியாக இதற்கு சில தோராய வழிமுறைகள் இருந்தாலும் அறிவியல்ரீதியாக இதற்கு சரியான வழிமுறை இன்னும் கண்டறியப்படவில்லை. நம்மிடம் பேசுபவர்கள் என்ன நினைத்துக்கொண்டே நம்மிடம் பேசுகிறார்கள் என்பதை அறிய முடிந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். இந்த பதிவில் மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறியும் சில எளிதான தந்திரங்களை பார்க்கலாம்.
முகபாவனைகளை அறிதல்
இது மிகவும் பயனுள்ள அதேசமயம் கடினமான தந்திரம் ஆகும், ஏனெனில் இதற்கு நீண்ட பயிற்சி தேவை. இதன்படி நீங்கள் மற்றவர்கள் கூறும் வார்த்தைகளற்ற முகபாவனைகளை படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரின் குரல், அவர்களின் தொடுதலின் அழுத்தம், முகபாவனைகள் மற்றும் கையெழுத்து போன்றவை ஒருவரின் மனநிலையை அறிய குறிப்பு ஆகும். உலகிலேயே முகபாவனைகளை வைத்து மனநிலையை அறிவதில் வல்லவர்கள் அம்மாக்கள்தான். அனைத்து அம்மாக்களாலும் தங்கள் குழந்தைகளின் முகபாவனைகளை வைத்து அவர்கள் மனநிலையை அறிந்துகொள்ள கூடிய தனித்திறமை உள்ளது. ஒருவரின் குரல் தழுதழுத்தாலோ, அல்லது பலவீனமாய் தொட்டாலோ அவர்கள் சோகமாய் உள்ளார்கள் என்று அர்த்தம். அதேபோல கையெழுத்து வேகமாகவும், மோசமாகவும் இருந்தால் அவர்கள் கோபமாக உள்ளார்கள் என்று அர்த்தம்.
கண்ணாடி தந்திரம்
இது ஒருவரின் நிலையையும், அவர்களின் ஆளுமையையும் பிரதிபலிக்கும் செயல் ஆகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இது மற்றவரின் காலணியை நீங்கள் போடுவது போன்றதாகும். இது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர உதவியாக இருக்கும். நீங்கள் யாருடைய மனதை அறிய விரும்புகிறீர்களோ அவர்களை காப்பி அடிப்பது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவர்கள் உங்களிடம் மனம்திறந்து பேசவும் தூண்டுகோளாக இருக்கும்.
மோசடியை கண்டறியும் தந்திரம்
நாம் அனைவருமே மற்றவர்கள் பொய் கூறுவதை எளிதில் கண்டறிந்து விடுவோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் வெகுசிலரால் மட்டுமே மற்றவர்கள் பொய் கூறுவதை கண்டறிய இயலும். பொதுவாக யாரெல்லாம் கண்களை பார்த்து பேச தயங்குகிறார்களோ அவர்கள் நிச்சயம் பொய் கூறுபவர்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் பொய் கூறுபவர்கள் உண்மை கூறுபவர்களை விட அதிக கண் தொடர்புடன் இருப்பார்கள். இதுவரை நீங்கள் நினைத்து கொண்டிருந்த உளவியல் உண்மை தவறானது, எனவே இனி கண்களை பார்த்து பேசுகிறவர்கள் உண்மை பேசுகிறார்கள் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.
சூழலை படிக்கவும்
வெவ்வேறு சூழ்நிலைகளில் செய்யப்படும் ஒரு வகையான சைகை, பல விஷயங்களைக் குறிக்கலாம். தம்பதிகளுக்கு இது மிகவும் பயனுள்ள தந்திரம் ஆகும். ஒரு பெண் தன் கண்களை மிக அகலமாக திறந்து மற்றவர்கள் பார்க்காத வண்ணம் தன் கணவருக்கு மட்டும் அதனை காட்டினால் அவரிடம் சொல்ல மறந்த ஏதோ ஒரு விஷயம் இப்பொழுது நியாபகம் வந்து விட்டது என்று அர்த்தம். அதேபோல தன் கணவர் பற்றி இதுவரை தெரியாத ஒரு தகவலை புதியதாக அறிய நேர்ந்தால் பெண்கள் தன் கண்களை சுருக்கி கூர்மையாக்கி தங்கள் கணவரை பார்ப்பார்கள்.
யூகிக்கும் விளையாட்டு
உங்களுக்கு நெருக்கமானவர் எதையோ மறைக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்த தந்திரத்தை உபயோகிக்கலாம். அவர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் யூகித்து ஒன்று ஒன்றாக கூறவும், அப்போது அவர்களின் முகபாவனைகளை கவனிக்கவும். சரியான செய்தியை நீங்கள் கூறும்போது நிச்சயம் அவர்களின் முகபாவனையில் மாற்றம் ஏற்படும். அவர்கள் எதைப்பற்றி மறைக்கிறார்கள் என்று நீங்கள் கண்டறிந்து விட்டால் தொடர்ந்து அது தொடர்பான செய்திகளை தொடர்ந்து பேசுங்கள், சில மணித்துளிகளில் அவர்கள் உங்களிடம் அதனை கூறிவிடுவார்கள்.
தசைகள் சொல்லும் ரகசியம்
இது மிகவும் பிரபலமான அதேசமயம் துல்லியமான முடிவுகளை வழங்கக்கூடிய இரு தந்திரம் ஆகும். பொதுவாகவே அனைவரும் தங்கள் மனதில் ரகசியங்களை மறைத்து வைப்பதில் வல்லவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்களின் பதட்டமான உடலே உங்களுக்கு பாதி உண்மையை கூறிவிடும். அப்படி ஒருவர் பதட்டமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் நிச்சயம் அவர்கள் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது. மேலும் தசை வாசிப்பு என்ற முறையும் உள்ளது. ஒருவரின் கையின் பின்புற தசைகளை அழுத்திக்கொண்டே நீங்கள் உங்களுடைய யூகிக்கும் விளையாட்டை தொடங்குங்கள். இது அவர்களை அசௌகரியமாக உணர செய்யும்.அவர்கள் மனதில் இருக்கும் சரியான விஷயத்தை நீங்கள் கூறிவிட்டால் அவர்களின் கை நரம்புகள் பதட்டமாகி முறுக்கேறும்.
டெலிபதி
இது பல காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பு ஆகும். ஆனால் இது உண்மைதான் என்பதை நிரூபிக்க பல வரலாற்று ஆவணங்கள் உள்ளது. டெலிபதி என்பது ஒருவர் நினைப்பதை மற்றவர்கள் எந்தவித தந்திரமும் இன்றி கண்டறியும் முறையாகும். இதற்கு நீங்கள் கடுமையான பயிற்சி எடுக்கவேண்டியது அவசியம். ஒரே இரவில் இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் வேலை செய்ய வாய்ப்புள்ளது.
இரவு நேர உரையாடல்
ஒருவரிடம் இருந்து நீங்கள் உண்மையை பெற வேண்டும் என்றாலோ அல்லது அவர்கள் உங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலோ அதற்கு சரியான சமயம் இரவுதான். குறிப்பாக நள்ளிரவை தாண்டிய உரையாடல் பெரும்பாலும் நீங்கள் விரும்பும் தகவலை பெற்றுத்தரும். ஆய்வுகளின் படி நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் நீங்கள் உரையாடலை தொடங்கினால் எதிர்முனையில் உள்ளவர்கள் உண்மையை கூறவும், மனம் திறந்து பேசவும் 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.