இங்கிலாந்தில் சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை- 6 பாகிஸ்தானியர்களுக்கு 101 ஆண்டு ஜெயில்
17 Nov,2018
இங்கிலாந்தை சேர்ந்தவர் முகமது இப்ரான் அலி அக்தர் (37). இவரது நண்பர்கள் ஆசிப் அலி (33), தன்வீர் அலி (37), சலே அகமது எல்-ஹகாம் (39), நபீல் குர்ஷித் (35), இக்லாக் யூசப் (34). இவர்கள் அனைவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள்.
இவர்கள் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. எனவே அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்கள் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் 101 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவர்களில் அக்தார் என்பவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
மேலும் குர்ஷித்துக்கு 19 ஆண்டுகளும், யுசப்புக்கு 20 ஆண்டுகளும், தன்வீர் அலிக்கு 14 ஆண்டுகளும், எல்-ஹசாமுக்கு 15 ஆண்டு களும், ஆசிப் அலிக்கு 10 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.