வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
14 Nov,2018
எல்சால்வேடர் நாட்டை சேர்ந்த இளம்பெண் கோர்டெஸ். இவர் 12 வயது முதல் தனது வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்டார். அதனால் கர்ப்பம் அடைந்தார்.
தொடக்கத்தில் அவர் அதை அறியவில்லை. கடுமையான ரத்தப்போக்கு மற்றும் வேதனையுடன் துடித்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கருக்கலைப்புக்கு முயன்றதாக சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அங்கு வந்த போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோர்டெஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே ஒரு வாரம் சிகிச்சை பெற்ற அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் நடந்தது.
தற்போது இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது வளர்ப்பு தந்தை குறித்து கோர்டெஸ் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என மறுக்கப்பட்டது. ஆனால் மருத்துவ பரிசோதனையில் அனைத்தும் வளர்ப்பு தந்தைக்கு எதிராகவே உள்ளது.
இருந்தாலும் தனது கருவை கலைக்க முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு