மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த 48 தமிழர்கள் மீட்பு
09 Nov,2018
மலேசியாவில் சம்பளம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் 3 மாதங்களாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த 48 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மலைப் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக மலேசியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தினைச் சேர்ந்த 48 பேருக்கு ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களுக்கு 3 மாதங்கள் சம்பளம வழங்கப்படவில்லை என்பதுடன் ஒருவேளை மட்டும் உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ள.
அத்துடன் அவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றi நிறுவனத்தின்வசமே காணப்பட்டது. இதனைத் தொடர்ந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது நிலை குறித்து கைத்தொலைபேசியில் ; வீடியோவாக பதிவு செய்து, உறவினர்களுக்கு அனுப்புpயிருந்தனர். இந்த காட்சிகள், மலேசியாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டதனையடுத்து மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் முருகேசனின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது முயற்சியால் 48 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.