ஐசியுவில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்
04 Nov,2018
உத்திரபிரதேசத்தில் பாம்புக்கடியால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் பாம்புக்கடியால் சிறுமி ஒருவர் தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று ஐசியுவில் நுழைந்த சில மருத்துவமனை ஊழியர்கள் சிறுமியை பலவந்தப்படுத்தி கூட்டு பாலியல் வண்புணர்வு செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே அதிர்ந்துபோன அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீஸார் மருத்துவம்னை ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த அயோக்கியர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.